உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1. அரபுமொழிச் சொற்கள்

அகபர், அகபார்=செய்தி.

அக்பர்=பெரியவர் (கடவுள்.)

அசல்=துவக்கம், ஆதி, முதல்.

அத்து=எல்லை, வரம்பு, உரிமை.

அஞ்சுமன்=சங்கம், கழகம்.

அமல்=செய்கை, நடவடிக்கை, இச்சொல் பறிமுதல் செய்தல் என்னும் பொருளிலும் வழங்கப்படுகிறது. அமுல் என்று தமிழில் வழங்கப்படுகிறது.

அமானி=கி(க)லெக்டரின் அதிகாரத்திற்கு உட்பட்டது, பாதுகாப்பு,

ஒப்படை.

அனாமத்து=சேமிப்பு, ஒப்படை.

அமீனா=அமில்தாருக்குக் கீழ்ப்பட்ட கிராம உத்தியோகஸ்தன். அமில்தார்=வரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர்.

அயன்=உண்மை நிலை.

அயன்ஜமா=தண்டல் பணத்தின் மொத்தம்.

அய்வேஜ்=பொருள் அல்லது ஆளை ஈடு கொடுத்தல.

அர்ஜி=மனு, விண்ணப்பம்.

அர்ஜிதாஸ்து=எழுதி விண்ணப்பம் செய்தல்.

அர்-ரஹ்மான்=இரக்கம் உள்ளவன் (கடவுள்.)

அலாயிதா=தனியான, தனிப்பட்ட, (அலாதி என்று வழங்கப்

படுகிறது.)

அல்-கபார்=மன்னிக்கிறவன். (கடவுள்.)

அல்-புர்கான்=குர்ஆன்.

அல்லா (ஹீ)=கடவுள்.