உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இரண்டா மடியி னீறொரூஉ வெய்தி

முரண்ட வெதுகைய தாகியு மாகா

திரண்டு துணியா யிடைநனி போழ்ந்து

நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா.

தனிச்சொற் றழுவல வாகி விகற்பம் பலபல தோன்றினு மொன்றே வரினு மிதற்பெய ரின்னிசை யென்றிசி னோரே.

37

38

தொடையடி யித்துணை யென்னும் வழக்க முடையதை யன்றி யுறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமங் கொளலே.

39

ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியு

மிருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுத்

தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந்

தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியு

மடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவு மெனவைந் தாகு மின்னிசை தானே.

40

அந்தங் குறையா தடியிரண் டாமெனிற்

செந்துறை யென்னுஞ் சிறப்பிற் றாகும்.

41

தன்பா வடித்தொகை மூன்றா யிறுமடி

வெண்பாப் புரைய விறுவது வெள்ளையின் றன்பா வினங்களிற் றாழிசை யாகும்.

42

ஐந்தா றடியி னடந்தவு மந்தடி

யொன்று மிரண்டு மொழிசீர்ப் படுதவும்

வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே.

43

ஒருமூன் றொருநான் கடியடி தோறும்

தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை

விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே.

44

அளவடி யந்தமு மாதியு மாகிக்

குறளடி சிந்தடி யென்றா யிரண்டு

மிடைவர நிற்ப திணைக்குற ளாகும்.

45