உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

மயில்வாகனப் புலவர் (1779-1816-?)

ஈழநாட்டு மாதகல் என்னும் ஊரில் பிறந்தவர். கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: புலியூர் யமக அந்தாதி. யாழ்ப்பாண வைபவம் (இது வசன நூல்). ஞானாலங் கார ரூப நாடகம், காசியாத்திரை விளக்கம். இவ்விரண்டு நூல்கள்

வெளிவரவில்லை.

கந்தப்ப ஞான தேசிகர் (?-1829)

தொண்டை நாட்டு இராய வேலூரில் பிறந்தவர். கந்தப்பர் என்பது இவர் பெயர். பின்னாளில் திருவண்ணாமலை ஈசானிய திசையில் தங்கியிருந்தபடியால் ஈசானிய தேசிகர் என்று கூறப்பட்டார். இவர் இயற்றிய நூல்கள். அண்ணாமலையார் தோத்திரப் பாமாலை. அண்ணாமலையார் வெண்பா, அண்ணாமலை அந்தாதி, அண்ணாமலைக் கண்ணி, ஞானக் கட்டளை, மௌனகுரு தேசிகர் சிகாமணிப் பதிகம், மெனளகுரு ஞானதேசிகர் பஞ்சரத்தினம்.

ப. கந்தப் பிள்ளை (1766-1842)

இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் தந்தையார். கூழங்கைத் தம்பி ரானிடத்தில் தமிழ் பயின்றவர். உல்லாந்து மொழி, போர்ச்சுகீசு மொழி, ஆங்கில மொழிகளையும் கற்றவர். மருத்துவமும் அறிந்தவர். இவர் இருபத் தொன்று நாடக நூல்களை இயற்றினார் என்பர். இவர் இயற்றிய நூல்கள் சில இராம விலாசம். ஏரோது நாடகம், சண்டி நாடகம், சந்திரகாச நாடகம், நல்லைநகர்க் குறவஞ்சி, நீக்கிலார் நாடகம் முதலியன. இவர் தொடங்கி முடிக்காமல் விட்ட இரத்தினவல்லி விலாசத்தை இவர் மகனார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் பாடி முடித்தார்.

வேதநாயக சாஸ்திரியார் (1773-?)

புரொடெஸ்டண்டு கிறிஸ்துவர். தஞ்சாவூரில் இருந்தவர். கவி பாடுவதில் வல்லவர். உவின்ஸ்லோ என்பவருடன் சேர்ந்து குருட்டுவழி என்னும் நூலை 1838-இல் எழுதினார். பேரின்பக் காதல் (1853), சாஸ்திரக் கும்மி (1840), இயேசுவின் பேரில் பதங்கள் (1853) முதலிய செய்யுள் நூல்களை இயற்றினார்.