உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

கண்ணிமை கைந்நொடி யென்றிவை யிரண்டும் மின்னிடை யளவே யெழுத்தின் மாத்திரை.

வன்மை யென்ப கசட தபற.

மென்மை யென்ப ஙஞண நமன

251

6

7

8

50 00

இடைமை யென்ப யரல வழள

அவைதாம்,

புள்ளியொடு நிற்ற லியல்பென மொழிப புள்ளியில் காலை யுயிர்மெய் யாகும். அரைநொடி யளவின வறுமூ வுடம்பே. அரைநொடி யென்ப தியாதென மொழியின் நொடிதரக் கூடிய விருவிர லியைபே. குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே.

9

10

11

12

நேர்நால் வகையு நெறியுறக் கிளப்பின்

நெடிலுங் குறிலுந் தனியே நிற்றலும்

அவற்றின் முன்ன ரொற்றொடு நிற்றலும்

இவைதாம் நேரசைக் கெழுத்தி னியல்பே.

13

இணைக்குறில் குறினெடி லிணைந்து மொற்றடுத்தும்

நிலைக்குறி மரபி னிரையசைக் கெழுத்தே.

14

அகவ லென்ப தாசிரியப் பாவே.

15

66

ஏழடி யிறுதி யீரடி முதலா

வேறிய வெள்ளைக் கியைந்த வடியே

மிக்கடி வருவது செய்யுட் குரித்தே

மூவடிச் சிறுமை பெருமை யாயிரம்

ஆகும் ஆசிரி யத்தின் அளவே.

16

என்றார் சங்கயாப்புடையார்."

(அடியோத்து, 32 உரை மேற்கோள்)

முந்திய மோனை யெதுகை யளபெடை