உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

257

செய்யுளியல் ஆசிரியரின் பெயரைக் கூறாமல், செய்யுளியலுடையார் என்று கூறுகின்றனர். இவ்வுரையாசிரியர்கள் கூறுவன வருமாறு:

“நேர்க்கீழ்க் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நேர்பசையாம்; நிரையசைக்கீழ் குற்றியலுகரம் வரினும் முற்றியலுகரம் வரினும் நிரைபசையாம் என்றார் செய்யுளியலுடையார்.'

666

(யாப்பருங்கலம், தளையோத்து, விருத்தியுரை.)

""சொற்சீர்' என்பது,

‘கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்து

முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்

ஒழியிசை யாகியும் வழியசை புணர்ந்தும்

சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே.’

என்று செய்யுளியலுடையார் ஓதிய பெற்றியால் வருவனவெனக் கொள்க.’

و,

(யாப்பருங்கல விருத்தி, அடியோத்து)

66

ஒருசாராசிரியர் இரண்டாமெழுத்தின் மேலேறிய யுயிரொன்றி வந்தாலு மூன்றாமெழுத்து ஒன்றிவந்தாலும் ஏதுப்பாற்படுத்து வழங்குவர். வரலாறு:

'துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநா

ளணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி

வடியமை யெஃகம் வலவயி னேந்தித்

தனியே வருதி நீயெனின்

மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.'

இஃதிரண்டாமெழுத்தின் மேலேறிய உயிரொன்றிய வெதுகை. இது செய்யுளியலுடையார் காட்டியது.

وو

(யாப்பருங்கல விருத்தி, தொடையோத்து)

"வெண்கூ வெண்பா வென்பது நேரசை வெண்பாவென வெழுத்து மிக்கிசைப்பது. அஃது ஆசுகவிகள் கூறுமாற்றாற் கூறப் பிறப்பது. என்னை? 'வெண்கூ வெண்பா வெழுத்திறந் திசைக்கும்' என்றாராகலின். வரலாறு:-