உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

‘தண்டைந்த திண்டோளாய் தாங்கலாந் தன்மைத்தோ கண்டடையார் தம்மைக் கனற்றுமா-வண்டடைந்த

நாணீல நாறுந்தார் நன்னன் கலைவாய வாணீலக் கண்ணார் வடிவு.'

எனவும்

‘அறந்தருதண் செங்கோலை யன்ன மடந்தை

சிறந்தன சேவலோ டூடி - மறந்தொருகா

றன்ன மகன்றாலுந் தன்னுயிர் வாழாவா

லன்ன மகன்றி லிவை’

எனவும் இவை வெண்கூ வெண்பாவென்று செய்யுளிய லுடையார் காட்டிய பாட்டு.

(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 4 உரை மேற்கோள்.)

““மனைக்குப்பாழ் வாணுத லின்மை தான்சென்ற

திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை இருந்த

அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ்

கற்றறி வில்லா வுடம்பு.'

ஃது அகவல் வெண்பாவென்று செய்யுளியலுடையார் காட்டிய பாட்டு.

(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 4 உரைமேற்கோள்.)

“மஞ்சு சூழ் சோலை மலைநாட மூத்தாலும்

அஞ்சொன் மடவார்க் கருளு.'

இது பிறப்பென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா.

‘இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரலகம் புல்லு.'

இது காசென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா.

இவை செய்யுளியலுடையார் காட்டிய வெண்பா வெனக்

கொள்க.

(யாப்பருங்கலக்காரிகை, 25, குணசாகரர் உரை)

“செய்யுளியலுடையார் நாற்சீரடி, தன்னையே நாலெழுத்து முதலா ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி என்றும்,