உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

19. தக்காணியம்

261

இந்நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில், உரையாசிரியர், “இடைச் சொல்லும் உரிச் சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம். அவிநயம், நல்லாறன் மொழி வரி முதலியவற்றுட் காண்க” என்று எழுதுகிறார்.

இதனால், தக்காணியம் என்னும் பெயருள்ள இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

20. தத்தாதிரேயப் பாட்டியல்

இப்பெயருள்ள நூல் ஒன்றிருந்ததென்பதைச் "சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்" என்னும் நூலில் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் எழுதியிருப்பதிலிருந்து அறிகிறோம். இந்நூலைப் பற்றி அவர்கள்

எழுதுவதாவது:

66

"தாத்தாதிரேயப் பாட்டியலென்பதை என்னுடைய தமிழாசிரியர் களுளொருவராகிய செங்கணம் ஸ்ரீ விருத்தாசல செட்டியாரவர்களிடம் பார்த்துப் பாடமும் கேட்டிருந்தேன். அது விருத்தங்களா லமைந்துள் ளது: புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை.'

وو

இந்நூலை இயற்றிய ஆசிரியர் யார், எப்போது இயற்றப்பட்டது என்னும் விவரங்கள் தெரியவில்லை.

21. நக்கீரர் அடிநூல்

இப்பெயரையுடைய செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங் கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர விருத்தியுரையில்,

“ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எவற்றாற் பெறுது மெனின், 'ஐஞ்சீர் அடுக்கலும் மண்டில மாக்கலும்

வெண்பா யாப்பிற் குரிய வல்ல.'

என்று நக்கீரனார் அடிநூலுள் எடுத்தோதப்பட்டமையாற் பெறுதும்” என்று உரையாசிரியர் எழுதுகிறார். மேலும், யாப்பருங்கலம், ஒழிபியலில், விருத்தியுரைகாரர் இவ்வாறு எழுதுகிறார்: