உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

மூவடி முதலா முறைசிறந் தேறித்

தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண்

டெய்து மென்ப வியல்புணர்ந்த தோரே.

2

666

வஞ்சி தானே யடிவரம் பின்றி

யெஞ்சா விசைநிலை தூங்க லெய்தியும் ஆசிரிய மாகியு முடியு மென்ப.

செப்ப லோசையிற் சீர்தளை சிதையாது மெய்ப்படக் கிளந்த வெண்பா விரிப்பிற் குறணேர் நெடிலென மூன்றா யவற்றின் இறுதி வடியே முச்சீர்த் தாகி யதனீ றசைச்சீ ரெய்தி யடிவகை யோரிரண்டு முதலா முறைசிறந் தீரா றேறு மென்ப வியல்புணர்ந் தோரே.

99

3

4

(யாப்பருங்கலம், அடியோத்து - 10. உரைமேற்கோள்.)

அவைதாம்,

முதலோ டயல்கொள்வ திணையய லின்றி மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட் டிறுதியொடு கொள்வ தொரூஉ விறுதிச் சீரொழித் தேனைய தொன்றிற் கூழை முதலீ றடைந்தவற் றின்மை யிருவகைக் கதுவாய் முற்று நிகழ்வது முற்றே

முதலோடெட் டாகு மென்மனார் புலவர்'

5

என்றார் பரிமாணனார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்பம்

வேண்டிற்றிலர். என்னை?

‘செந்தொடை யியைபிவை யல்லா நான்கு

முதற்சீ ரடியால் விகற்பங் கொள்ப

என்றாராகலின்."

66

'அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை.

6

(யாப்பருங்கலம், தொடையோத்து, 17, உரை மேற்கோள்)

மயிலைநாதர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (பொதுவியல், 51ஆம் சூத்திரம்) பரிமாணனார் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.