உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு சச்சிதானந்த சுவாமிகள் (1815-1889)

179

தொண்டைநாட்டு ஈசூரில் பிறந்தார். சென்னைக் குயப்பேட் டையில் வசித்தார். திருத்தணிகை சரவணப் பெருமாளையரிடம் தமிழ் பயின்றார். புரசை அருணாசல சுவாமிகளிடம் ஞானோப தேசம் பெற்றார்.

இவர் இயற்றிய நூல்கள். உத்தமவாதம், எதார்த்தவாதம், சர்வமத சிந்தாந்த விளக்க வினாவிடை, சீவகாருணிய விளக்கம், சுவானிபூதி விளக்கம், சுவானுபூதி விநோத நான்மணி மாலை, திருக்குத் திரிசிய விவேகம், பிரத்தியட்சாநுபூதி விளக்கம், வேதாந்த இலக்கணம் என்பன.

அன்றியும், கைவல்ய நவநீதம், வேதாந்த சூளாமணி, பிரபுலிங்க லீலை, சொரூபசாரம், உபநிடதம், பகவத்கீதை ஆகிய நூல்களுக்கு விருத்தியுரை எழுதினார்.

பொன்னம்பலப் பிள்ளை (?-1891)

யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் இவர் ஊர்: மாவையந்தாதி, சித்திரகவி என்னும் நூல்களை இயற்றியிருக்கிறார். மாவையந்தாதி, யமகமாக அமைந்த நூல்.

கருத்த முத்துப் பிள்ளை (1816-1895)

எட்டயபுரம்: இவருடைய ஊர். எட்டயபுரம் அரசரிடம் அலுவல் செய்தவர். தமிழ் வடமொழி இரண்டையும் கற்றவர். இவர் செய்த நூல்கள் கழுகுமலைப் பள்ளு. வேளாளர் பள்ளு. சிவகிரிக் குமரக் கடவுள் பிள்ளைத் தமிழ், சிவதத்துவ சிதாநிதி: திருச்செந்தூர் முருகர் கலித்துறை யந்தாதி, மேற்படி பதிற்றுப் பத்தந்தாதி, மேற்படி வெண்பா வந்தாதி, திருப்புவனப் புராணம், விருத்த பராசரியம்.

சுவாமிநாதர் (1819-?)

யாழ்ப்பாணத்து மானிப்பாய் இவரது ஊர். இசைத் தமிழ், இயற்றமிழ் இரண்டிலும், வல்லவர். இராம நாடகம், தருமபுத்திர நாடகம் முதலிய நாடக நூல்களை எழுதினார்.