உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

ஆயிர மிறுதி மூவடி யிழிபா வாசிரியப் பாட்டி னடித்தொகை யறிப வீரடி முதலா வேழடி காறும்

திரிபில வெள்ளைக் கடித்தொகை தானே. முதலெழுத் தளவொத் தயலெழுத் தொன்றுவ தெதுகை யதன்வழி யியையும் பெறுமே. முதலெழுத் தொன்றுவ மோனை யெதுகை

273

19

20

முதலெழுத்த தளவோ டொத்தது முதலா வதுவொழித் தொன்றினாகு மென்ப.

21

விவ்விரு தொடைக்குங் கிளையெழுத் துரிய.

22

சொல்லினும் பொருளினு மாறுகோண் முரணே.

23

இயையே யிறுசீ ரொன்று மென்ப.

24

25

அளபெடைத் தொடைக்கே யளபெடை யாகும்.

மோனை யெதுகை முரணே யளபெடை யேனைச் செந்தொடை யியைபே பொழிப்பே யொரூஉவே யிரட்டை யொன்பதும் பிறவும் வருவன விரிப்பின் வரம்பில வென்ப.

26

அசையினுஞ் சீரினு மிசையினு மெல்லா மிசையா தாவது செந்தொடை தானே.

27

முழுவது மொன்றி னிரட்டை யாகும்.

28

விகற்பங் கொள்ளா தோசையி னமைதியும்

முதற்க ணடிவயின் முடிவ தாகும்.

29

உரையொடு நூலிவை யடியில நடப்பினும்

வரைவில வென்ப வாய்மொழிப் புலவர்.

30

மொழிபிசி முதுசொன் மூன்று மன்ன.

31

செயிர்தீர் செய்யுட் டெரியுங் காலை

யடியி னீட்டத் தழகுபட் டியலும்.

32

ஒரோவடி யானு மொரோவிடத் தியலும்.

33

அவைதாம்,