உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

அறுசீர் ரெண்சீ ரடிநான் கொத்தங் கிறுவது தாண்டக மிருமுச் சீரடி குழியது திருநாற் சீரே.

30. பனம்பாரம்

275

4

பனம்பாரம் என்னும் பெயருள்ள இலக்கண நூலை ஆசிரியர் பனம்பாரனார் இயற்றினார். யாப்பருங்கலம், அடியோத்து, 30-ஆம் சூத்திர உரையில், விருத்தியுரைகாரர் கீழ்க்காணும் பனம்பாரச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்:

66

அகத்திணை யல்வழி யாங்கதன் மருங்கின் வகுத்தன சொற்சீர் வஞ்சியொடு மயங்கும்.

நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், நன்னூல் சிறப்புப் பாயிரச் சூத்திரங்களில் இரண்டை, பனம்பாரச் சூத்திரங்கள் என்று குறிப்பிடுகிறார்.

"தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்

தான்றற் புகழ்த றகுதி யன்றே,’

1

‘மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்

தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்

மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும்

தன்னை மறுதலை பழித்த காலையும்

தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே.

2

இவ் விரண்டு சூத்திரமும் பனம்பாரம்’

என்று எழுதுகிறார் மயிலைநாதர். எனவே. நன்னூலில் உள்ள இச்

என்று

சூத்திரங்கள் பனம்பார இலக்கணத்துச் சூத்திரங்கள் தெரிகின்றன.

இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

31. பன்னிருபடலம்.

புறப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிற பன்னிரு படலம் என்னும் பெயருள்ள நூலொன்று இருந்ததென்பது பேராசிரியர், இளம்பூரண அடிகள், நச்சினார்க்கினியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் ஆகியோர் உரைகளினால் தெரிகிறது.