உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சின்னத்தம்பி (1830-1878)

யாழ்ப்பாணத்து உடுப்பிட்டிக் கோயிற்பற்றைச் சார்ந்த தனக்காரக் குறிச்சியில் பிறந்தவர். தியாகராச பண்டிதரிடம் கல்வி பயின்றார். இலக்கணம், இலக்கியம், கணிதம் கற்றவர். உடுப்பிட்டியில் தமிழ் வித்தியா சாலையை நிறுவினார். இவர் இயற்றிய நூல்கள்: இராம விலாசம், சிவதோத்திரக் கீர்த்தனை, சோதிடச் சுருக்கம், நில அளவைச் சூத்திரம், புதுச்சந்நிதி முருகன் பதிகம், மதனவல்லி விலாசம், விக்கினேசுவரர் பதிகம், வீரபத்திரர் பதிகம், வீரபத்திரம் ஊஞ்சல், வீரமாகாளியம்மன் பதிகம்.

சிவசம்புப் புலவர் (1830–1909)

யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையைச் சார்ந்த உடுப்பட்டி இவர் ஊர். நல்லூர் சரவண முத்துப் புலவரிடத்தும் அவர் மாணவரான நல்லூர் சம்பந்தப் புலவரிடத்தும் தமிழ் பயின்றார். பல பிரபந்த நூல்களை இயற்றினார். பாஸ்கர சேதுபதி மகாராசர் பேரில் கல்லாடக் கலித்துறை. நான்மணி மாலை. இரட்டைமணி மாலை. முதலிய பிரபந்த நூல்களை இயற்றினார் பாண்டித்துரைத் தேவர் மீது நான்மணி மாலை பாடினார்.

இவர் ஏறக்குறைய அறுபது பிரபந்த நூல்களை இயற்றினார் என்பர். கற்தவன நாதர் பதிகம். வல்லிபுரநாதர் பதிகம், செந்தில் யமக வந்தாதி (1888-இல் வல்வையில் அச்சாயிற்று.) திருவேரக அந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், புலோலி நான்மணி மாலை, ஊஞ்சல் (இவை 1889-இல் வலுவெட்டித்துறையில் அச்சாயின.) திருச்செந்திற்றிருவந்தாதி (1888) முதலிய நூல்களை இயற்றினார். மறைசை யந்தாதிக்கு உரை எழுதி 1893இல் வெளியிட்டார். யாப்பருங்கலக் காரிகைக்கும் கந்த புராணத்திற்கும் (வள்ளியம்மை திருமணப்படலம் வரையில்) உரை எழுதினார்.

கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் (1831-1878)

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கங்கை கொண்டான் என்னும் ஊரிற் பிறந்தார். பிற்காலத்தில் துறவு பூண்டார். மனோன் மணிய நாடக ஆசிரியர் சுந்தரம்பிள்ளையின் ஞானகுரு. சுந்தர சுவாமி களைச் சுந்தரம் பிள்ளையவர்கள் மனோன்மணிய நாடகத்தில் ஜீவக அரசனுடைய குலகுருவாக அமைத்திருக்கிறார்.