உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

நீர்க்குழைப்பா னென்று நிற்பாரு மாய்க்கலங்க

ஆர்க்குழைப்பான் சென்றாய் அறிவுடைய அண்ணலே.

அம்பிகை பாகர் (1854-1904)

201

யாழ்ப்பாணத்து இணுவில் இவருடைய ஊர். இணுவில் நடராசையரிடத்திலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரிடத்திலும் கல்வி பயின்றார். சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் நெருங்கிய நண்பர். இணுவையந்தாதி என்னும் நூலை இயற்றினார். சூளாமணி வசனம் எழுதினார். தணிகைப் புராணத்திற்கு நகரப் படலம் வரையில் உரை எழுதினார்.

குமாரசுவாமிப் புலவர் (1854-1922)

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவர் ஊர். சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் கல்வி பயின்றார். வடமொழியும் பயின்றார். இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்து ஏழாலை என்னும் ஊரில் நிறுவிய சைவப் பிரகாச வித்தியா சாலையில் தமிழ்ப்புலவராக 1876 முதல் 1899 வரையில் இருந்தார். 1902-ஆம் ண்டு முதல், வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை யின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தார்.

"

இவர் இயற்றிய நூல்கள்: சாணக்கிய நீதிவெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம், சிசுபால வதம் (வசனம்). இவை வடமொழியி லிருந்து மொழி பெயர்க்கப் பட்டவை.

கீழ்க்கண்ட நூல்களுக்கு உரை எழுதினார்: திருக்காசைப் புராணப் பொழிப்புரை, (1890), யாப்பருங்கலக் காரிகைப் புத்துரை (1899), திருவாதவூரார் புராண உரை, அகப்பொருள் விளக்கப் புத்துரை, கம்ப ராமாயண பாலகாண்டம் அரும்பதவுரை, நீதிநெறி விளக்கவுரை தண்டியலங்கார உரை.

இவர் இயற்றிய வேறு நூல்கள். இலக்கியச் சொல் அகராதி, தமிழ்ப் புலவர் சரித்திரம். மிலேச்சமதவிகற்பம் (1888 ஆண்டு, செய்யுள் நூல்,) இலக்கணச் சந்திரிகை (1898), இரகுவமிசக் கருப்பொருள், கண்ணகி கதை வசனம், வினைப்பகுபத விளக்கம், வதுளைக் கதிரேசர் ஊஞ்சல், பதிகம். "செந்தமிழ்”ப் பத்திரிகையில் அவ்வப்போது பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.