உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

207

தில் இருந்த வித்துவ சிரோமணி பொன்னம்பல பிள்ளையிடம் தமிழ் பயின்றார். 1899 முதல் 1914-ஆம் ஆண்டில் தாம் இறக்கும்வரையில் கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக இருந்த T. V. சதாசிவ பண்டாரத் தார் அவர்கள் இவருடைய மாணவர்களில் ஒருவர்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் இயற்றிய நூல்கள்:- மாணாக்கர் ஆற்றுப்படை, இயன் மொழி வாழ்த்து, தென் தில்லை (தில்லைவளாகம்) உலா. தென்றில்லைக் கல்ம்பகம், களப்பாழ்ப் புராணம், இராமாயண அகவல். இவை அச்சிடப்பட்டுள்ளன.

நற்றிணை நானூறு என்னும் சங்கத்தொகை நூலுக்கு இவர் சிறந்த உரை எழுதியுள்ளார். இந்த உரை 1915-ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டுள்ளது.

பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், இறையனாராற்றுப் படை, நீலகண்டேச்சுரக் கோவை, சிவபுராணம் (ஞான சங்கீதை), சிவ கீதை, பழையது விடுதூது, மருதப்பாட்டு, தமிழ்நாயக மாலை என்னும் நூல்களையும் இயற்றினார். இவை அச்சிடப்படவில்லை.

பிச்சை இபுராகிம் புலவர் (1863-1908)

திரிசிர புரத்துக்கு அருகில் உள்ள அரசங்குடியில் பிறந்தவர். உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயரிடம் தமிழ் பயின்றார். எஸ். பி. ஸி. கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள்: பகுதாதுமாலை, ஆதமலை திருப்புகழ், வெள்ளாங்குளத்தூர் அவுலியாமாலை, திருமதீனத்துக் கலம்பகம், திருமதீனத்துப் பதிற்றுப்பத்தந்தாதி, நாகூர் பிள்ளைத் தமிழ், மகபூப் சுபகானி மாலை, நாயகத் திருப்புகழ், நத்தகறொலி யாண்டவர்கள் பிள்ளைத் தமிழ், சீதக்காதிப்பதிகம், மொகிதீன் ஆண்டவர் மாலை, திருமதீனத்து வெண்பா வந்தாதி, திருமதீனத்து மாலை, திருமதீனத்து யமகவந்தாதி முதலியன.

பண்டித மனோன்மணி யம்மையார் (1863-1908)

குன்றத்தூரையடுத்த மண்ணிவாக்கம் இவரூர். கவிபாடும் ஆற்றல் உடையவர். மருத்துவமும் அறிந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: பழநி வெண்பாப் பதிகம் பழநி இரங்கல், பழநிப் பாமாலை,