உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

223

நாலு மந்திரி கதை, பஞ்சதந்திரம், வீரகுமார நாடகம், விட நிக்கிரக சிந்தாமணி.

கிளார்க்கு ஐயர்11

ஐரோப்பியர் கிறிஸ்துமத போதகர். தமிழில் சில நூல்களை எழுதியிருக்கிறார். தீர்க்க தரிசன வியாக்கியானம், போதகர் ஒழுக்கம் என்னும் நூல்களை எழுதி 1865-ஆம் ஆண்டில் பாளையங் கோட்டையில் அச்சிற்பதிப்பித்தார். இராமாநுச கவிராயரிடத்தில் தமிழ் கற்றார்.

குமரகுருதாச சுவாமிகள்

இவரூர் பாம்பன். இவர் இயற்றிய நூல்கள். நாலாயிரப் பிரபந்த விசாரம், பரிபூரணானந்த போதம், தகராலயம், திவோத்திய சடாச்சரோபதேசம் என்னும் சிவஞான தேசிகம் (1893), இராமசேது மான்மியம் (1897), சுப்பிரமணியம் என்பதைக் குறித்த விசாரம் (1899), திருப்பா (1899) முதலியன.

சரவணப்பொருமாள் கவிராயர்

இவருடைய ஊர் முதுகுளத்தூர். அஷ்டாவதானம் செய்தவர். இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்றார். முத்துராமலிங்க சேதுபதியின் அவைப்புலவராக இருந்தார். சேதுபதி யமைச்சர் முத்திருளப்பப்பிள்ளைமீது காதல் பிரபந்தம் பாடினார். பணவிடு தூது, அசுவமேத யாக புராணம், வினாயகர் திருமுக விலாசம் என்னும் நூல்களை இயற்றினார். இவர் பாடிய என்னும் பாட்டு இனிமையுடையது என்பர்.

கோபாலகிருஷ்ண பாரதி

66

ஆரடி வீதியில்

وو

நாகைப்பட்டினத்துக்கு அடுத்த நரிமணம் என்னும் ஊரில் பிறந்தவர்: இசைக்கலையில் வல்லவர்: இசைப்பாட்டுக்கள் இயற்று வதிலும் வல்லவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை. திருவையாறு தியாகையர் முதலியவர்களிடம் பழகியவர். இவர் இயற்றிய நூல்கள்: நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை.