உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு இராமசாமி செட்டியார்

219

இவரது ஊர் திருவெவ்வளூர் (திருவள்ளூர்.) சலசலோசனச் செட்டியாரின் தந்தையார் இவர். திருவிடைமருதூர்க் கலம்பகம், திருக்கழுக் குன்றக் கலம்பகம் என்னும் நூல்களை இயற்றியுள்ளார். இராமாநுச நாவலர்

புதுச்சேரியில் பிறந்தவர். இவரைப் பற்றிய செய்திகள் தெரியவில்லை. இவர் இயற்றிய நூல்கள்: சுதரிசன கிரிப் புராணம், ஸ்ரீ முஷ்ணப் புராணம், திருச்சித்திரகூட புராணம், புருடார்த்த தீபிகை என்னும் பால வினாவிடை, வைணவ தத்துவம், வைராக்கிய சூரியோதயம், தேசிகன் திருப்பதிகம், மணவாள மாமுனிகள் திருப்பதிகம் எதிராச சதகம், ஆழ்வார் பஞ்சரத்தினம், வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி கூரத்தாழ்வார் பிரபாவம், போற்றித் திருப்பதிகம் முதலியன.

இலிங்கப்ப ஐயர்

உத்தமதானபுரம் இவர் ஊர். கம்பராமாயணச் சொற்பொழிவு செய்வதிலும் இசைப்பாட்டு பாடுவதிலும் வல்லவர். சுவாமிமலை முருகக்கடவுள்மீது குறவஞ்சி நாடகம் இயற்றியுள்ளார்.

உவின்ஸ்லோ ஐயர்°

ஐரோப்பியர். பாதிரியாராக இருந்து யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் கிறிஸ்து சமயத்தொண்டு செய்தவர். 1823 முதல் 1840 வரையில் தமிழில் பல துண்டுப் பிரசுரங்கள் எழுதி அச்சிட்டார். உவின்ஸ்லோ தமிழ் ஆ ங்கில அகராதியை எழுதி 1862-இல் அச்சிற்பதிப்பித்தார்.

ஏகாம்பரப் புலவர்

யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியைச் சேர்ந்த வல்லிபட்டித் துறை இவரது ஊர். யாழ்ப்பாணத்திலிருந்த சேனாதிராய முதலியாரிடத்திலும் சென்னையில் இருந்த திருத்தணிகை விசாகப் பெருமாளை யரிடத்திலும் கல்விகற்றார். கந்தரந்தாதிக்கு உரை எழுதியிருக்கிறார். இராஜராம் கோவிந்த ராவ்

இவர் தஞ்சாவூர் மராட்டிய அரசரின்கீழ் அலுவல் செய்த மராட்டிய குடும்பத்தினர். மராட்டிய பாஷையிலிருந்த வடநாட்டுப்