உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

221

பராவல், உத்தரஞான சிதம்பர நாமாவளி, பாதார்ச்சனைக் கீர்த்தனை முதலியன.

கனகசபை நாயகர்

பொன்னப்ப நாயகரின் புத்திரர். புரசைப்பாக்கம் அஷ்டாவ தானம் சபாபதி முதலியாரின் மாணாக்கர். காஞ்சிபுரத்திலிருந்த சில கனதனவான்கன் விரும்பியபடி சில நூல்களை இயற்றினார். அவை காமாட்சியம்மையார் தோத்திரம், கருக்கமர்ந்தாள் பதிகம். மஞ்சணீர்க் கரை காளிமாதேவியார் பதிகம். சந்தைவல்லியம்மன் பதிகம், நுங்கம் பாக்கம் கருக்கமர்ந்தாள் பதிகம். சத்தித் திருவேகம்பர் சந்தப்பதிகம். இந் நூல்கள் 1876-ஆம் ஆண்டில் சென்னை மெமோரியல் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன.

கவிராச நெல்லையப்ப பிள்ளை கவிராச ஈசுரமூர்த்தி பிள்ளை

19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் வாழ்ந்திருந்தவர்கள். வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இருவரும் சகோதரர்கள். இவர்கள் வீட்டில் ஏட்டுச்சுவடிகள் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்துப் போற்றிப் பாதுகாக்கப்பட்டிருந்தன. அச் சுவடிகளைக் கண்ட டாக்டர் உ.வே. சாமிநாதையர் வியந்து புகழ்ந்திருக்கிறார். தூசி படியாமல் அழகாகவும் ஒழுங்காகவும் ஏட்டுச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த னவாம்.

இவர்கள் வீட்டுப் புத்தகசாலையிலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை உ.வே. சாமிநாதையர் பெற்றுக் கொண்டார். இவர்கள் வீட்டிலேதான் முதன் முதலாகக் "கொங்குவேள் மாக்கதை” என்னும் நூலைக் கண்டாராம். கண்டு, "கொங்குவேள் என்பவருடைய கதையாக இருக்கலாம் என்றெண்ணி அச்சுவடியை வைத்துக் கொண்டேன்’ என்னு ஐயர் அவர்கள் தமது சரித்திரத்தில் எழுதியிருக்கிறார். இவர்கள் வீட்டிலிருந்துதான் அய்யர் அவர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களையும் பெற்றுக்கொண்டார்.

இவர்கள் தங்கள் வீட்டு ஏட்டுச் சுவடிகளைச் சாமிநாதை யருக்குக் கொடுத்ததல்லாமல், திருநெல்வேலியிலிருந்த வேறு பல புலவர்களிடமிருந்தும் ஏட்டுச் சுவடிகளை வாங்கிக் கொடுத்தார்கள். இவர்கள் இவ்வாறு செய்த பேருதவிக்காக ஐயரவர்கள் இவர்கள் மீது நன்றி பாராட்டி ஒரு வெண்பா பாடினார். அவ்வெண்பா இது: