உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு I|

சிதைவுண்ட தமிழ் நூல்கள்

மறைந்துபோன தமிழ் நூல்களைப் பற்றி ஒருவாறு ஆராய்ந்தோம். உரைாயசிரியர் முதலியோரால் குறிப்பிடப்பட்டிருப்பதனால் அவற்றைப் பற்றி இவ்வளவாவது அறியமுடிகிறது. இதனால், எவ்வளவு இலக்கியச் செல்வங்களை இழந்துவிட்டோம் என்பதை ஒருவாறு அறியு முடிகிறது. உரையாசிரியர்களாலும் மற்றவர்களாலும் குறிப்பிடப்படாமலே, பெயர்கூடத் தெரியாமலே, மறைந்துபோன, நூல்கள் எத்துணையோ அறியோம். இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்ற நூல்களிலும் சில வற்றில் சில பகுதிகள், குறைந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் இங்குக் குறிப்பிட வேண்டியது முறையாகும். அவற்றை இங்கு ஆராய்வோம்.

ஐங்குறுநூறு:

6

எட்டுத் தொகையில் ஒன்றாகிய இந்நூலில், நெய்தற்றிணையில், கிழவற்குரைத்த பத்தில் 9ஆம், 10ஆம் செய்யுள்கள் காணப்பட வில்லை. முல்லைத்திணையில் கிழவன் பருவம் பாராட்டுப் பத்தில் 6ஆம் செய்யுளில், இரண்டாம் அடியும், தேர் வியங்கொண்ட பத்தில் 10ஆம் செய்யுளின் 2 ஆம் அடியும் சிதைந்துள்ளன.

ஐந்திணை எழுபது:

பதினெண் கீழ்க்கணக்குகளைச் சேர்ந்தது இந்நூல். மூவாதியாரால் வெண்பாவினால் இயற்றப்பட்ட இந்நூலில், சில செய்யுள்கள் மறைந்து ட்டன. முல்லைத்திணையில் இரண்டு செய்யுள்களும் (25, 26), நெய்தற் றிணையில் கடைசி இரண்டு செய்யுள்களும் (69,70) காணப் படவில்லை. கைந்நிலை:

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று இது. மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய இந்நூலில், குறிஞ்சித் திணையில் 1ஆம் 8 ஆம் செய்யுள்களும், பாலைத்திணையில் 2 முதல் 8 வரையில் உள்ள செய்யுள்களும்,