உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

239

1889-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். பழனியாண்டி என்பவர் இந்நூல் முழுவதையும் 1889-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்தார். முருகேச முதலியார்

திருமயிலை இவரது ஊர். இயற்றமிழாசிரியர். அஷ்டா வதானம் வீராசாமி செட்டியாரின் மாணவர். இவர் சென்னைப் பச்சையப்ப முதலியார் கல்விச் சாலையில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். 1884-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட அரிச்சந்திர ம் ஆ வெண்பாவைப் பரிசோதித்துக் கொடுத்தார்.

வடதிருமுல்லைவாயில்

வரசித்தி விநாயகர் பதிகம், பழநியாண்டவர் மாலை என்னும் நூல்களை இயற்றினார். இவை, சென்னை கலாவர்த்தன சபையாரால் தமது கலாரத்நாகர அச்சுக் கூடத்தில் 1866-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன.

வண்ணக்களஞ்சியப் புலவர்

ஹமீத் இபுறாகீம் என்பது இவரது இயற்பெயர். வண்ணக் களஞ்சியம் என்பது சிறப்புப் பெயர். முகம் மதியர். நாகூரில் வாழ்ந்தவர். இராசநாயகம் என்னும் காவியத்தைக் கி.பி. 1804-ஆம் ஆண்டில் இயற்றினார். தீன்விளக்கம் என்னும் நூலை 1817-இல் இயற்றினார். குத்பு நாயகம், பாதுஷா நாடகம் என்னும் நூல்களையும் இயற்றினார். வயித்திய லிங்காசாரி

முத்துவீரியம் என்னும் இலக்கண நூலை இயற்றிய திரிசிரபுரம் உறையூர் வித்துவான் முத்துவீர உபாத்தியாயரின் மகனார் இவர். சென்னைப் பட்டனத்தில் இருந்தவர். இசைக் கலையிலும், ஒவியக் கலையிலும் வல்லவர். குங்குலியக் கலய நாயனார், எறிபத்த நாயனார், அமர்நீதி நாயனார் சரிதங்களைத் கீர்த்தனையாகப் பாடி இருக்கிறார். அமர்நீதி நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1879-ஆம் ஆண்டில் சென்னைக் கல்வி விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதற்குச் சிறப்புப் பாயிரம் அளித்த (புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரின் மாணவர்) பு. முனிசாமி முதலியார் இந்நூலாசிரியரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

எவ்வெவ் வுருவும் அவ்வவ் வுருவாய்த்

தீட்டுந் திறமும் ஈட்டிய பொருளை