உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

245

கோவை, என்னும் இரண்டு நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். சாத்திரக் கோவையில் அத்து விதாந்தம், ஞானபாஸ்கர உதயம், கலைஞான தீபம், (ஒவ்வொன்றும் 1000 செய்யுட்கள்) இரத்தினச் சுருக்கம் (500 செய்யுள்), சடாதார விளக்கம் என்னும் திருமந்திரம் (200 செய்யுள்), வழலை முறை, கற்பவிதி, யோகக் கும்மி, சுத்த சலத்தெளி வெட்டு, சித்தர்கள் பாமாலை என்னும் நூல்கள் அடங்கியுள்ளன. சேத்திரக் கோவையில் திருக்குற்றாலப் பதிகம், செப்பறைப் பதிகம், கூடுதுறை, சோமசுந்தரமாலை, ஆற்றூர்ப் பதிகம், திருமயிலைப் பதிகம், கருவூர்ப் பதிகம் முதுலிய 39 நூல்கள் உள்ளன. இவர் இயற்றிய கன்னியாகுமரிப் பகவதி யந்தாதி 100 செய்யுட்களை யுடையது. ஆரோக்கிய நாயகர்

கவிராஜ சேகரர் பு. ஆரோக்கிய நாயகர் என்பது இவருடைய பெயர், சென்னையில் இருந்தவர். தேம்பா வணிக் கீர்த்தனை என்னும் நூலை இவர் இயற்றினார். இந்நூல் 1857-ஆம் ஆண்டில் அரங்கேற்றப் பட்டது. இந்நூலுக்குச் சில வித்துவான்கள் ‘சாற்றுக் கவி' அளித்துள் ளனர். அவர்கள் திருத்தணிகை விசாகப் பெருமானையர், அஷ்டா வதானம் வீராசாமி செட்டியார், சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமள புரம் இராச கோபால பிள்ளை, புதுவை வித்துவான் செ. சவரிராயலு நாயகர், வித்துவான் தஞ்சை அருளப்ப முதலியார் முதலியோர். இந்நூலின் ஒரு ‘சாற்றுக் கவி' இது :

அகிலமிசை கடவுளவதார ஆண்டோர்

ஆயிரத்தென் ணூற்றைம்பத் தேழில் மேவும்

புகலரிய தைமாதம் சனிவா ரத்தில்?

புதுப்பேட்டை அந்தோனியா ராலயத்தில்

அகமகிழ்ந்து வெகுஜனமுன் விஸ்வ கோத்திர

அருளானந் தன்பலவாய் முயற்சி செய்யத்

தகவுறுதேம் பாவணிக்கீர்த் தனையை நன்றாய்ச் சாற்றியா ரோக்கியனரங் கேற்றி னானே.

இராசம் ஐயர் (1872 - 1898)

மதுரை மாவட்டத்து வத்தலகுண்டு இவரது ஊர். பிரபுத்தபாரதம் என்னும் ஆங்கில வெளியீட்டை நடத்தினார். இவர் எழுதிய தமிழ் நாவல் கமலாம்பாள் சரித்திரம்.