உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பெறத் தேடினார்கள். இவ்வாறு பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் பதினேழு நூல்கள் இன்னவை என்று ஐயமில்லாமல் உறுதியாகத் தெரிந்த பிறகு ஒரு நூலைப்பற்றி மட்டும் கருத்து வேற்றுமை இருந்தது. அது, பதினெட்டாவது நூல் கைந்நிலை என்று சிலரும் இன்னிலை என்றும் வேறு சிலரும் கருதியதாகும். இவ்வாறு இருசாராரால் கருதப்பட்ட இரண்டு நூல்களும் 19-ஆம் நூற்றாண்டில் கிடைக்க வில்லை.

இருபதாம் நூற்றாண்டிலே இரண்டு நூல்களின் ஏட்டுச் சுவடிகளும் கிடைத்தன. இன்னிலை ஏட்டுச்சுவடி 1915-ஆம் ம் ஆண்டிலும் கைந்நிலை ஏட்டுச்சுவடி 1931-ஆம் ஆண்டிலும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. (கைந்நிலையைப் பற்றி மேலே எழுதியுள்ளேன்) இன்னிலை ஏட்டுச்சுவடியைக் கண்டு பிடித்தவர் வித்துவான் த. மு. சொர்ணம்பிள்ளை யவர்கள். இந்தச் சுவடியைத் திரு. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பித்தார்கள்.

யவர்கள் 1915-ஆம் ஆண்டில் அச்சிற்

இந்நூல் அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்று நான்கு பிரிவுடையது. நாற்பத்தைந்து வெண்பாக்களை யுடையது. "பொய்கையார் இன்னிலை” என்று பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. இதில் பெரிய வியப்பு என்னவென்றால், பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதுதான்!

இந்நூல் முகவுரையில், வ.உ. சிதம்பரம்பிள்ளையவர்கள் இந்நூல்

ஏட்டுப் பிரதியைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்கள்.

“எனக்குக் கிடைத்த இந்நூலின் ஏட்டுப்பிரதி திருநெல்வேலி ஜில்லா ஆழ்வார் திருநகரியில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்துத் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முற்றுறக் கற்று 'மாறனலங்காரம்' முதலிய சில அரிய நூல்களை இயற்றியருளிய ஸ்ரீமான் இரத்தினக் கவிராயரவர்களால் எழுதப்பட்டுள்ளது... இவ்வேட்டுப் பிரதியை எனக்கு அளித்தவர்கள் திருநெல்வேலி ஹிந்துக்கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமான் த. மு. சொர்ணம் பிள்ளையவர்கள். இவர்களுக்கு இவ்வேட்டுப் பிரதியை வேறுபல தொன்னூலேட்டுப்பிரதிகளோடு சேர்த்தளித்தவர்கள் திருமேனிக் கவிராயரவர்கள் சந்ததியார்களுக்குத் தலைவராகவும், எனக் உறவினராகவும் நண்பராகவும், திருநெல்வேலி ஜில்லா தாலுக்கா