உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

ஐந்திணை ஐம்பது. 8. ஐந்திணை எழுபது. 9. திணை மாலை நூற்றைம்பது. 10. திணைமொழி ஐம்பது. (நாலைந்திணை) 11. முப்பால் (திருகுறள்). 12. திரிகடுகம். 13. ஆசாரக் கோவை. 14. பழமொழி நானூறு. 15. சிறு பஞ்சமூலம். 16. முதுமொழிக் காஞ்சி. 17. ஏலாதி 18. கைந்நிலை. கைந்நிலை

இந்தப் பதினெட்டுக் கீழ்க்கணக்கு நூல்களும் இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால், சென்ற 19-ஆம் நூற்றாண்டில் கைந்நிலை என்னும் நூல் பலருக்குத் தெரியாமலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமலும் இருந்தது. அக்காலத்தில் சிலர் “இன்னிலை என்பது பதினெட்டு நூல்களில் ஒன்று என்று கருதினார்கள். 1888-ஆம் ஆண்டில் திரு. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள், தமக்குக் கிடைத்த மிகப் பழைய ஏட்டுச்சுவடி யொன்றில் கைந்நிலை என்பது கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்று எழுதியிருந்ததைக் கண்டு அதனைத் தாமோதரம் பிள்ளை யவர்களுக்குத் தெரிவித்தார்கள். பிறகு, கைந்நிலை கீழ்க்கணக்கு நூலைச் சேர்ந்தது என்பது அறியப்பட்டது. னால், அந்த நூலின் பிரதி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

திரு. தி. செல்வகேசவ முதலியாரவர்கள் கைந்நிலை என்னும் நூல் ஒன்று உண்டு என்பதை நம்பவில்லை. அவர் 1893-ஆம் ஆண்டில் அச்சிட்ட ஆசாரக் கோவை என்னும் கீழ்க்கணக்கு நூலின் பதிப்புரையில் இதுபற்றி எழுதியுள்ளார். “இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள இலக்கிய இலக்கண உரைகளிலும் கைந்நிலைச் செய்யுள் மேற்கோள்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும் எவர்க்கும் கட்புலனாயிற் றில்லை. ஆகவே, கைந்நிலையைக் 6 கையில் நிலைபெறக் காணுந்தனையும் உறுதி கூறுதலாகாது” என்று அவர் எழுதியுள்ளார்.

6

கைந்நிலை என்னும் கீழ்க்கணக்கு நூலின் ஏட்டுப் பிரதி 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் கிடைக்கவில்லை. ஆகவே, அச்சிடப்படவில்லை. பிறகு, இந்த 20-ஆம் நூற்றாண்டிலே 1931-ஆம் ஆண்டிலே கைந்நிலை ஏட்டுப் பிரதி கிடைத்து அச்சிடப்பட்டது. அதன் ஏட்டுப்பிரதியைப் பெற்று அச்சிட்டவர் திரு. அநந்த ராமையரவர்கள். இது வெளிவந்த பிறகு, கீழ்க்கணக்கைச் சேர்ந்த பழையநூல் இது என்பது உறுதியாயிற்று. பின்னர் 1936-ஆம் ஆண்டில் வ.உ. சிதம்பரம்பிள்ளையவர்களும், எஸ். வையாபுரிப் பிள்ளை யவர்களும் சேர்ந்து பதிப்பித்த தொல்காப்பியம் பொருளதிகாரம்