உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

275

காட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, "இவ்வாறு தொல்லாசிரியர்களும் தொல்லுரை யாசிரியர்களும் இந்நூலினை எடுத்தாண்டிருப்பதே இந்நூலின் மேம்பாட்டைக் காட்டா நிற்கும்” என்று எழுதியுள்ளார். இதுவும், ஆதாரமின்றி நுழைத்தெழுதப்பட்ட' உண்மைக்கு

66

மாறானதாகும். இதுபற்றியும் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை யவர்கள். கூறியிருப்பது கருதத்தக்கது.

"பேராசிரியரும். நச்சினார்க்கினியரும் இந்நூலை (இன்னிலை நூலை) எடுத்தாண்டதாக ஸ்ரீ பிள்ளை (வ.உ.சி.) அவர்கள் கூறுகி றார்கள். ஆனால், அவர்கள் காட்டும் இரண்டு இடங்களிலும் பூதத்தார் அவையடக்கு எனக்காணப்படுகிறதேயன்றிப் பொய்கையாரைப் பற்றியேனும், இன்னிலையைப் பற்றியேனும் ஒன்றும் குறிப்பிடப்பட வில்லை. கடைசியாக, யாப்பருங்கல விருத்தியில் ஒரு செய்யுள் இன்னிலையின் கண்ணே உள்ளது எனப் பிள்ளை யவர்கள் காட்டுகிறார்கள். ஆண்டும் அச்செய்யுள் ஒளவையார் பாடியதாகக் கொள்ளக் கிடக்கின்றது.

995

இதனால், இன்னிலை என்னும் நூல் கீழ்க் கணக்கு நூலைச் சேர்ந்தது அன்று என்பதும், அது ஒரு போலி நூல் என்பதும் தெரிகின்றன.

சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த அநந்தராம அய்யரவர்கள். 1931-ஆம் ஆண்டு கைந்நிலையை அச்சிட்ட பிறகு. இன்னிலை போலிநூல் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கிவிட்டது.

1.

2.

அடிக்குறிப்புகள்

(திருவள்ளுவ நாயனாரால் கடைச் சங்கம் அழிக்கப்பட்டது. என்னும் கதையைச் சரித்திர நிகழ்ச்சியுள்ள உண்மை என்று கருதிக் கொண்டு இவ்வாறு எழுதுகிறார் என்று அறிக. - மயிலை சீனி. வே.சாமி)

1887-இல் இவர் பதிப்பித்த கலித்தொகைப் பதிப்புரையில் எழுதப்பட்டது இதனை மேலே காட்டியுள்ளேன். (- மயிலை சீனி. வே.சாமி)

3. இலக்கிய மணிமாலை, பக்கம் 81.1954

எஸ்.வையாபுரிப்பிள்ளை.

ஆம் ஆண்டு முதற் பதிப்பு.

4. "தொல்காப்பியம் இளம்பூரணம். பொருளாதிகாரம் ஒன்பது இயல்களும். பதிப்பாசிரியர். வ.உ.சிதம்பரம் பிள்ளை. எஸ். வையாபுரிப்பிள்ளை. பிரசுரித்தவர்: வா விள்ள. இ. இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1936.’

5. பக்கம் 81, இலக்கிய மணிமாலை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, 1954.