உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்ப இராமாயணம்

(இந்நூல் 118-ஆரம்பத்தில் கூறியுள்ள ‘கம்ப இராமாயணம்'

என்பதன் தொடர்புரை.)

1886-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட ஏரெழுபது, திருக்கை வழக்கம் என்னும் புத்தகத்துக்கு முகவுரை எழுதிய தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள், அக்காலத்தில் அச்சிடப்பட்ட கம்ப ராமாயணத்தில் அதனை அச்சிட்டோர் சமயக் காழ்ப்புக் காரணமாக என்னென்ன மாறுபாடுகள் செய்தார்கள் என்பதை அந்த முகவுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். அந்தப் பகுதியைக் கீழே தருகின்றேன்:

"தேவாரத்துள் ‘பத்தூர்புக் கிரந்துண்டு' என்றாற் போல்வனவும், திருவாசகத்து ‘ஏகாசமிட்ட விருடிகள்' என்றாற் போல்வனவும், பெரியபுராணத்துள் 'காதில் வெண்குழையோன் கழறொழ நெடியோன் காலம் பார்த்திருந்தது மறியான்' என்றாற் போல்வனவும் எங்ஙனம் வெள்ளிப் பாடலாக வழங்கியதோ, அவ்வண்ணமே இராமாயணத் துள்ளும் வெள்ளிப்பாடல் வழங்கிற்றாகலின், சைவபக்கமான செய்யுளு மவையேயென்பாரு முளராலோவெனின், அற்றன்று.

“தேவார முதலியவற்றுட் கலந்த அவ்வெள்ளிப் பாடலைச் சைவர்கள் யாரு முடன்பட்டபடி யன்று. யாமு மதுவே. அது நிற்க, மாணிக்கமும் போலிமணியும், வைரமும் பளிங்கு முதலிய வெள்ளைக் கல்லும் விரவச் செய்துழிப் பார்வை வல்லான் பிரித்தெடுக்குந் திறம் போலும், சான்றோர் செய்யுளும் பின்னை யோர் செய்யுளும், அவ்வாறே மொழிகளும் மயங்கியவழிச் செவிவல்லான் பிரித்துணர்ந் துணர்த்துமன்றே......

"அல்லதூஉம், வெள்ளிப் பாட்டெனச் சிலவற்றைக் கூறுவார் தம்மாற் கம்பர் பாட்டென வுடன்பட்ட வேனைய செய்யுளோடி யாவரு மொப்புக் கொண்ட.