உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

கடவுள் வணக்கம்

இலக்கண மின்னதிஃதென யார்க்கும்

அளக்க வொண்ணாதத னடிபரவுதும்

இலக்கண வினாவிடை விளக்க முறற்பொருட்டே

நன்னூற் காண்டிகையுரை

303

இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர் 1846-இல் நன்னூலுக்கு விருத்தியுரை எழுதி அச்சிட்டார்கள். அவ்விருத்தி யுரையின் தொடக்கத்தில் கீழ்க்கண்ட செய்யுளை இயற்றியமைத் தார்கள். "மலர்தலையுலகின் மல்கிருள் அகல” என வரும் நன்னூல் சிறப்புப் பாயிரத் தின்கீழ் இச்செய்யுள் வைக்கப்பட்டுள்ளது.

தேகிகர் சேவடி மனக்கு

மாசறு மணிமுடி யெனக்கு.

கடல்புடை சூழ்தரூஉங் காசினி யதனிடை வடதிசைக் கண்மரீஇ வளனெலாஞ் சுரந்து முனிமுன நடந்துறூஉ மூங்கிலிற் படர்ந்து குனிதிரை வைகையின் கொடுந்திற லழிந்தாங் கடைந்ததென் குமரி யகநெகிழ்ந் தன்பி னுடைந்துதன் வசப்படா துடல்சல சலத்து நீரா ழமாமெய் நிலைதடு மாறித் தீரா நீர்மையிற் றிரைக்கடல் படிந்து மதிமுக மலரிடை மலர்க்கணீர் மல்கத் துதி செய வென வாய் தூக்கி யாங்கே

LO

10

யெழுத்திய றழாஅ தெழுமொழி குளறி

வழுத்தியு மாரா வவாவலை வளைக்கையாற்

பொன்மணி மலர்தூய்ப் புரிந்துநன் கிறைஞ்சுறூஉந்

தென்மலை மாமுனி தேத்திய லுணர்ந்தோ

ரோர்பன் னிருவர்பா லொண்டமி ழுணர்ந்தோர்

சீர்பெற வெண்ணிலர் தேரினாங் கவருழைச்

சிவக்கொழுந் தென்னுமோர் தேசிக ரவருழைத்

தவக்கொழுந் தென்ன மாதவத்தினார் துதித் துறூஉஞ் சிவஞான தேசிகண் சேவடிக் கன்புபூண்

டவனூ லுணர்த்திய வைந்திய லோர்ந்தனன்

15

20