உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-ஆம் நூற்றாண்டில்

நாடக நூல்கள்

19-ஆம் நூற்றாண்டில் நாடக நூல்கள் எழுதப்பட்டு அச்சிடப் பட்டன. ஒன்றிரண்டு பழய நாடக நூல்களும் அச்சிடப்பட்டன. இந்த நாடக நூல்களில் இசைப் பாட்டுகள் அதிகமாகவும் வசனங்கள் குறைவாகவும் அமைந்திருந்தன. இவை பழய நாடக இலக்கண நூல்களின் முறைப்படி இல்லாமலும் மேல்நாட்டு முறைப்படி இல்லாமலும் புதுமுறையாக அமைந்திருந்தன. சிலப்பதிகாரம் முதலிய பழய நூல்களில் கூறப்படுகிற நாடக முறைப்படி இல்லாமலும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போன்ற மேல்நாட்டு முறைப்படி இல்லாமலும் இந்த நாடக நூல்கள் புது முறையாக அமைந்திருந்தன. இவை பெரும்பாலும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை. சென்ற நூற்றாண்டில் இந்த நாடக நூல்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் பட்டவை. சென்ற நூற்றாண்டில் இந்த நாடக நூல்களை அதிகமாகப் போற்றினார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், மலையாள நாட்டிலும் இத் தமிழ் நாடக நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. சில தமிழ் நாடக நூல்கள் மலையாள எழுத்தில் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன. சாவித்திரி நாடகம் மலையாள எழுத்தில் பாலக்காட்டில் 1890-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் பேர் பெற்று விளங்கிய “சதாரம்” என்னும் நாடக நூலை “ஸதாரம்” என்னும் பெயரில் மலையாள நாட்டில் அச்சிட்டார்கள். தமிழ் நாடக நூல்கள் கேரள நாட்டில் போற்றப்பட்டன. ஹரிச்சந்திரன், கோவலன் சரித்திரம். நல்லதங்காள், கண்ணகி, வள்ளி திருமணம் முதலிய தமிழ் நாடக நூல்கள் சென்ற நூற்றாண்டில் கேரளத்தில் சிறப்புப் பெற்றிருந்தன.

இந்த நாடக நூல்களில், பாட்டுகள் அதிகம். “சாகப்போகும் தருவாயிலும் பாட்டு, செத்துக் கிடக்கும் போதும் பாட்டு, அழும்போதும்