உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பாட்டு, எந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் பாட்டு” என்று இந்த நாடகங் களைப்பற்றி ஒருவர் எழுதுகிறார். ஆம். இந்த நாடகங்கள் தொடக்கம் முதல் முடிவு வரையில் பாட்டாகவே இருந்தன. இடையிடையே சில வசனங்களும் உண்டு. இந்த வசனங்களும் கட்டியக்காரன் கூற்றாக இருந்தனவே யல்லாமல், நாடகப் பாத்திரங்களின் உரையாடல்களாக அல்ல. ஆனால், அக்காலத்திலே இந்த நாடகங்களுக்கு நாட்டிலே அதிக செல்வாக்கிருந்தது.

என்னுடைய இளமைக் காலத்திலே, என்னுடைய இல்லத்தில் இருந்த நூல் நிலையத்தில் இந்த நாடக நூல்களில் பலவற்றைப் பார்க்கவும் படிக்கவும் நான் வாய்ப்புப் பெற்றிருந்தேன். சென்ற 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நாடக நூல்களின் பெயரையும், ஆசிரியர் பெயரையும் அச்சிட்டவர் பெயரையும் நான் அறிந்த வரையில் கீழே தருகிறேன். இது முழுப்பட்டியலாக இருக்க முடியாது.

ஆண்டு நூலின் பெயர்

ஆசிரியர் பெயர்

1864

சோகி நாடகம்.

1867

இராம நாடகம்.

1867

அரிச்சந்திர விலாசம்.

1868

1868

அருணாசல மகத்துவம் என்னும் வல்லாள

மகாராசன் விலாசம்.

சுமதி விலாசம்.

பதிப்பாசிரியர்

பெயர்.

சுப்பராய முதலியார்.

அருணாசலக் கவிராயர் (18-ஆம் நூற்றாண்டு) இயற்றியது. தொட்டிக்கலை வையாபுரி முதலியார் இந்த ண்டில் பதிப்பித்தார். இதற்கு முன்பு வேங்கடாசல முதலியார்,ராமசாமி நாயகர் இருவரும் சேர்ந்து பதிப்பித்தார்கள். ஆண்டு தெரியவில்லை.

அரங்க பிள்ளை.

ஆஸ்வாரப்ப பிள்ளை.