உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

29

மனமொத்த காதலர்களான சீவக நம்பியும் சுரமஞ்சரியும் காதல் இன்பத்தைத் துய்த்தனர் என்று கூறுகிற திருத்தக்கதேவர், அக்காதல் இன்பத்தை ‘இன்தமிழ் இயற்கை இன்பம்' என்று கூறுகிறார். அச்செய்யுள்:

கலைபுறஞ் சூழ்ந்த அல்குல் கார்மயில் சாய லாளும்

மலைபுறங் கண்ட மார்பின்

வாங்குவிற் நடக்கை யானும்

இலைபுறங் கொண்ட கண்ணி

இன்தமிழ் இயற்கை இன்பம்

நிலைபெற நெறியில் துய்த்தார்

நிகர்தமக் கிலாத நீரார்.

சீவக சிந்தாமணி, சுரமஞ்சரியார். 70.

இதனால், தமிழ் என்னும் சொல்லுக்கு, காதலாகிய அகப்பொருள் ஒழுக்கம் என்னும் பொருள் இருந்தது என்பதும், இப்பொருளில் இச்சொல் இடைக்காலத்தில் வழங்கிப் பிற்காலத்தில் வழக்கொழிந்து விட்டது என்பதும் அறியப்படுகின்றன.

அடிக் குறிப்புகள்

1. யாப்பருங்கலம், ஒழிபியல், "மாலை மாற்றே சக்கரஞ் சுழிக் குளம் என்னும் சூத்திர விருத்தியில், எண்வகை மணத்தைப் பற்றிக் கூறும் பகுதியில், இந்தச் செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.