உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

'பாண்டில் ஒப்பிற் பகன்றை மலரும் கடும்பனி யற்சிர நடுங்க'

-(நற். 86: 3-4)

இவ்வாறு சங்க இலக்கியங்களில் வழங்கியுள்ள அச்சிரம் என்னுஞ் சொல் பிற்காலத்தில் வழக்கொழிந்து மறைந்துவிட்டது. ஆனால், இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில் வழங்கி வருகிறது. வாயில் உண்டாகிய ஒருவித புண்ணுக்கு அச்சிரம் என்று பெயர் கூறப் படுகிறது. அச்சிரத்தை வாய்ப்புண் என்று கூறலாம். வாய்ப்புண்ணாகிய அச்சிரத்தை அச்சரம் என்றும் அட்சரம் என்றும் அக்கரம் என்றும் கூறுகிறார்கள்.

இந்த நோயை மலையாள மொழியில் அக்காரம் என்றும், கன்னட மொழியில் அக்ர என்றும் துளு மொழியிலும் அக்ர என்றும் தெலுங்கு மொழியில் அக்ஷரம் என்றும் கூறுகிறார்கள். திராவிட இன மொழிகளில் இவ்வாறெல்லாம் வழங்குகிற இச்சொற்கள் அச்சிரம் அல்லது அற்சிரம் என்னும் சொல்லின் திரிபுகள் என்று தோன்று கின்றன.

காலத்தின் பெயராகிய அச்சிரம் என்னுஞ் சொல் எப்படி வாய்ப்புண்ணுக்குப் பெயராக மாறிற்று?

பனிக்காலத்தைக் குறிக்கும் அச்சிரம் என்னுஞ் சொல் பனிக் காலத்தில் உண்டாகிய வாய்ப்புண் நோய்க்குப் பெயராயிற்று என்று தோன்றுகிறது. அச்சிர காலத்து வாய்ப்புண் என்று இது முதலில் து வழங்கப்பட்டிருக்கக் கூடும். பின்னர் நாளடைவில் பனிக் காலத்தில் தோன்றுகிற வாய்ப்புண்ணுக்குப் பெயராக மட்டும் நின்று நிலவுகிறது என்று கருதலாம்.