உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

அவ்வாறே, முல்லைக்கொடி வளரும் இடத்துக்கு (காடும் காட்டைச் சார்ந்த நிலம்) முல்லை நிலம் என்று பெயரிட்டார்கள். மற்றப் பாலை, நெய்தல் மருதம் என்னும் நிலங்களுக்கும் இப்படியே செடி மரங்களின் பெயரைக் கொடுத்தார்கள்.

இதனால், மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சிச் செடியின் பெயர்கொண்டு குறிஞ்சி என்று பெயர் பெற்றது என்பது தெரிகிறது.

குறிஞ்சி நாட்டிலே இருக்கிற ஊர்களுக்கு குறிச்சி என்பது பெயர். இது குறிஞ்சி என்னும் சொல்லிலிருந்து தோன்றிய பெயர். குறிச்சியில் வாழ்பவர் குறிச்சியர் என்று பெயர் பெற்றனர்.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர் குறவர். அவர்களில் ஆண்மகன் குறவன் என்றும், பெண்மகள் குறத்தி என்றும் பெயர் பெற்றனர்.

மலையாள மொழியில் குறிச்சி, குறிச்சியன், குறவன் என்னும் சொற்கள் வழங்குகின்றன. கன்னட மொழியில் இப்பெயர்கள் சிறிது திரிந்து வழங்குகின்றன. குறவரின் ஆடவருக்குக் கொறவ, கொறம் என்றும், குறப்பெண்களுக்குக் கொறவதி, கொறவிதி, கொறவஞ்சி என்றும், கன்னட மொழியில் வழங்கப்படுகின்றன. தெலுங்கு மொழி யில் குறவன் கொறவ என்றும் குறத்தி கொறவத, கொறவஞ்சி என்றும் கூறப்படுகின்றனர். கொறவஞ்சி என்பது குறவஞ்சி என்பதன் திரிபு.

துளுமொழியில் குறவன் கொறகெ என்றும் குறத்தி கொறபளு, கொறஜி என்றும் கூறப்படுகின்றனர்.

இந்தச் சொற்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய திராவிட இனமொழிகளில் வழங்குகிறபடியால், இந்த இனத்தார் பிரிந்து போவதற்கு முன்னே மூலத்திராவிட மொழியில் தோன்றி யிருக்க வேண்டும். குறிஞ்சி என்றும் செடியின் பெயரிலிருந்து குறிஞ்சி, குறிச்சி என்னும் இடப்பெயர்களும், குறவன், குறச்சியன், கொறவ, கொறம, கொறவதி, கொறவஞ்சி, கொறகெ, கொற்பளு, கொறஜி முதலிய மக்கட் பெயர்களும் தோன்றி வழங்குகின்றன.

6

குறவஞ்சியர் (குறத்தியர்), பெண்மகளிரின் கைரேகையைப் பார்த்துக் குறி சொல்வது வழக்கம். இக்காலத்திலும் இந்த வழக்கம் சில இடங்களில் உண்டு. குறத்தியர் கைபார்த்துக் குறி சொல்வதை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்திலே தமிழ் இலக்கியத்தில்