உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

129

புதுவகையான பிரபந்த நூல்கள் தோன்றின. அந்த நூல்களுக்குக் குறம் என்றும் குறவஞ்சி என்றும் பெயர் வழங்கப்படுகின்றன. அவை மீனாட்சியம்மை குறம், திருக்குற்றாலக் குறவஞ்சி முதலியன.

குறவ என்னும் திராவிட மொழிச்சொல்லை சம்ஸ்கிருதக்காரர் (வடமொழியாளர்) கடனாகக் கொண்டு வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்தச் சொல்லை அப்படியே உச்சரிக்க முடியாமல் கிராத என்று திரித்து வழங்குகிறார்கள். சமஸ்கிருதக்காரர் கொறவ என்னுஞ் சொல்லைத் தெலுங்கிலிருந்தோ கன்னடத்திலிருந்தோ எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கொறவ என்னுஞ் சொல்லே வடமொழியில் கிராத என்றாயிற்று. வட மொழியில் கிராத என்றால் வேடன் என்பது பொருள். கொறவ என்னுஞ்சொல் சமஸ்கிருதத்தில் கிராத என்றாயிற்று என்று கூறினால் சம்ஸ்கிருதமொழிப் பண்டிதர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கிராத என்னும் சொல்லிலிருந்துதான் கொறவ குறவன் முதலிய சொற்கள் உண்டாயின என்று சண்டித்தனம் செய்வார்கள். ஆனால் ஆராய்ச்சி, உண்மையை வெளிப்படுத்திவிடுகிறது.