உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறவன்

கிராதன்

மலைகளிலே வளர்கிற செடிகளில் குறிஞ்சிச் செடியும் ஒன்று. குறிஞ்சிச் செடிகளில் சிலவகை உள்ளன. குறிஞ்சிச் செடி கார் காலத்தில் பூக்கும் என்று கூறப்படுகிறது. சில மலைகளிலே வளர்கிற குறிஞ்சிச் செடிகள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்கின்றனவாம். குறிஞ்சிச் செடி குறிஞ்சிப் பூக்களைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘நீள்மலைக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி'

என்றும் (நற்றிணை 301: 1-2)

'மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக் கருங்கால் குறிஞ்சி மதனில வான் பூ’

என்றும் (நற்றிணை 68 : 2-3)

‘சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடன்'

என்றும் (குறுந்தொகை 3 : 2-4) வருவன காண்க.

பாண்டி நாட்டுச் சிறுமலை என்னும் குன்றுகளில் மலர்ந்த கூதாள மலரையும் குறிஞ்சிமலரையும் மதுரை நகரத்து மகளிர் தங்கள் கூந்தலில் அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

'சிறுமலை சிலம்பிற் செங்கூ தாளமொடு

நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து’

(சிலம்பு 14 : 88-89)

இதனால் குறிஞ்சிச் செடிகள் மலைகளில் வளர்கின்றன என்பது தெரிகிறது. மலைகளில் பலவித செடிகளும் மரங்களும் வளர்ந்த போதிலும், குறிஞ்சிச் செடிக்கு முதன்மை கொடுத்துப் பழங்காலத் தமிழர், மலையையும் மலையைச் சார்ந்த நிலத்தையும் குறிஞ்சி நிலம் என்று பெயரிட்டார்கள்.