உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

மெய்மேல்வரிக என்பது மெய்மேல் வருதல் என்னும் பொருள் உள்ளது(வரிக-வருதல்). உடம்பில் தெய்வம் ஏறி ஆடுவதை மருளாடுதல் என்று தமிழில் கூறுகிறோம் அல்லவா? தமிழர் மருளாடுதல் என்று கூறுவதை மலையாளிகள் "மெய்மேல் வரிக' என்று கூறுகின்றனர். மருளாடுதல் என்பதைவிட மெய் மேல் வருதல் என்பது பொருள் நிறைந்ததாக உள்ளது.

وو

மெய்யுறுதி என்னுஞ்சொல் சாவு, இறப்பு என்னும் பொருள் உள்ளது. பிறந்தவை எல்லாம் இறப்பது (உடல் அழிவது) உறுதி என்னும் உண்மையை மெய்யுறுதி என்னும் சொல் நினைவுறுத்துவதுபோல் அமைந்திருக்கிறது. உயிர் எழுத்தின் உதவி இல்லாமல் தானே இயங்காத எழுத்தைத் தமிழர் மெய்யெழுத்து என்று பெயரிட்டு வழங்கினார்கள் என்பதை நினைவுகொள்வோம்.

மெய்யாக்கம் என்றால் உடல் உரம் என்பது பொருள். மெய்யழகு என்பது உடலழகு என்னும் பொருள் உள்ளது.

மெய்யாரம், மையாரம், மெய்யாபரணம் என்னும் சொற்களும் மலையாள மொழியில் உண்டு. இவற்றிற்கு நகை என்பது பொருள். மெய்யில் (உடம்பில்) அணியப்படுவதால் இப்பெயர் பெற்றன. மெய்யேறுக என்னும் சொல்லும் மலையாளத்தில் உண்டு. இதன் பொருள் ஆளைத் தாக்குதல், ஆளை அடித்தல் என்பது.

கன்னடமொழியில் மெய் என்னும் சொல் மை என்று திரிந்து வழங்குகிறது என்று கூறினேன். மை (மெய்) என்னும் சொல்லி லிருந்து தோன்றிய சில சொற்கள் கன்னட மொழியிலும் உண்டு. மைகட என்பது ஒரு கன்னடச் சொல். இதற்குக் கைம்மாற்றுக் கடன் என்பது பொருள். மைகட என்பது தமிழில் மெய்க்கடன் என்றாகும். கன்னடத்தில் வழங்கு கிற மைகட என்பதுபோலவே, மலையாளத்திலும் மெய்க்கடம் என்று ஒரு சொல் உண்டு. (கடம் - கடன்) மெய்யையே (உடம்பையே) ஈடாகக் கருதி கொடுக்கும் கடன் என்பது இதன்பொருளாக இருக்கக் கூடும்.

கன்னட மொழியில் மைகரெ என்னும் சொல் ஒன்று உண்டு. (மை-மெய், கர-கரத்தல், மறைத்தல்) இதற்கு தலைமறைவாக இருத்தல், ஒளிந்து இடுதல், மறைத்துவாழ்தல் என்றும் பொருள் உண்டு. இது பொருள் பொதிந்த அழகான சொல்.