உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இலக்கியங்களிலும் புராணியக்கதைகளிலும் காணப்படும் பல்வேறு தகவல்களை இந்நூலில் இணைத்து ஆய்வு செய்துள்ளார்.

வெகுசன வாசிப்பிற்கென நூல் எழுதும் மரபு தொடர்ந்து இருந்து ருவதைக் காண்கிறோம். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் ணவு தொடர்பாக எழுதிய நூலும் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளது. தானிய உணவு, பருப்புவகைகள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள், பழங்கள், இறைச்சி, எண்ணெய்கள் ஆகியவை எவ்வகை யான இரசாயனப் பொருட்களைப் பெற்றுள்ளன என்பதை இந்நூலில் எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆ ய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை 96 ஏப்ரல் 2010

தங்கள் வீ. அரசு

தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை

சென்னைப் பல்கலைக்கழகம்