உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -19 'பரை உயிரில் யான் எனதென்றற நின்றதடியாம்' என்பது உண்மை விளக்கம்.

முக்கண்

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கண் நெற்றியில் உள்ளது. சூரியன், சந்திரன், தீ என்னும் மூன்று ஒளிகளைக் குறிப்பன மூன்று கண்கள் என்று தத்துவப் பொருள் கூறப் படுகிறது. 'மோகாய முக்கண் மூன்றொளி' என்பது திருமந்திரம். வேறு பொருளும் கூறப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் மூன்று சக்திகளையும் உடையவர் கடவுள் என்பதை அவருடைய மூன்று கண்களும் குறிக்கின்றன என்று காமிகாகமம் கூறுகிறது.

ஞான, இச்சா,

கிரியைகளாகவும்

7

சோம, சூரிய, அக்கினிகளாகவும் உள்ள விசாலம் பொருந்திய கண்களையுடையவர் என்பர் அகோர சிவாசாரியார்.8

புன்முறுவல்

உயிர்களுக்கு ஏற்படுகிற ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்னும் மூன்று வகைத்துன்பங்களையும் தமது புன்முறுவலினாலே கடவுள் கெடுத்தருளுகிறார் என்று இதன் தத்துவப் பொருள் கூறப் படுகிறது. 'இடர் மூன்றும் இழித்தருளும் இளமுறுவல் முகமலரிலங்க’ என்பது சிவதருமோத்திரம்.

சடைமுடி.

சடைமுடி ஞானத்திற்கு அடையாளம் என்பர். எனவே, கடவுள் ஞான உருவன், பேரறியுடையவன் என்பதைச் சடைமுடி தெரிவிக்கிறது. நுண்சிகை ஞானமாம்' என்பது திருமந்திரம்.

நிலாப்பிறை

சிவன் தனது சடாமுடியில் அணிந்துள்ள நிலாப்பிறை, அவரது முற்றறிவைக் (பேரறிவைக்) குறிக்கிறது என்று காமிகாகமம் கூறுகிறது.

66

தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி

நுமதி யானென வமைத்த வாறே

என்றார் பட்டினத்து அடிகள்.

10

9