உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

"மாதவர் பரவும் ஆனந்த நடனம்,

வயங்குறு சந்தியா நடனம்,

காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே,

கவின்பெறு திரிபுர நடனம்,

ஓதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ மொடும், உலக சங்கார

மேதகு நடனம், இவை சிவை! நாம்

விதந்த நன்னாமம் என்றுணர்தி.

73

93

இவ்வாறு ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என ஏழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும், இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகின்றார்:

6

"பிரம கற்பங்கள் தோறும்

பேணுநர் பொருட்டால் இந்தத்

திருநடம் ஏழும் செய்தும்:

செப்பும் அத்தானம் கேண்மோ:

அரவும் அம்புலியும் போற்றும்

அருள் தில்லை யம்பலத்தில்

பரவும் ஆனந்த தாண்டவம்

செய்வோம் பைம்பொற் பாவாய்!”

"இவர் மணிமாடக் கூடல்

இரசித சபையில் நின்று

தவர் அடிபரவச் செய்தும்

சந்தியா தாண்டவம், செம்

பவளமெல் இதழி! நின்பேர்ப்

பரவு தாண்டவத்தை, என்றும்

சிவமிகு திருத்த லத்தில்

சிற்சபை யதனில் செய்வோம்.

66

'அத்திரி கூட வெற்பென்

றறை திருக் குற்றாலத்தில்

சித்திர சபையில் செய்வோம்

திரிபுர தாண்டவம், பூங்