உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுவகைத் தாண்டவம்

தாண்டவ வரலாறு

சிறப்பியல்

"தேன்புக்க தண்பணை சூழ்தில்லைச் சிற்றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ”

சிவபெருமான் செய்தருளும் தாண்டவங்கள் நூற்றெட்டு என்பர்.

நூற்றெட்டுத் தாண்டவங்களையும் நாம் இங்கு ஆராயப்புகவில்லை. நாம் ஆராயப்புகுவது, ஐஞ்செயலைப் பற்றிய தாண்டவங்களை மட்டுமே. சிவபெருமான் ஐஞ்செயலைச் செய்கிறார். ஐஞ்செயலுக்கும் ஐந்து தாண்டவங்கள் இருக்கவேண்டியது முறையாகும். ஆனால் ஐஞ்செயலைக் காட்டும் தாண்டவங்கள் ஏழு என்று நூல்கள் கூறுகின்றன. ஐந்து எப்படி ஏழாயிற்று? இதனை ஆராய்வோம்.

புராணக் கூற்று

கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, 'தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு வகையான இசைகளினின்றும் ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார்.

66

ஒன்றின்பின் ஒன்றாய் ஒலித்ழுெந் தனவால் ஓதும் அவ்வேழ் சுரங்களினால்

நன்று நம்மிடையே எழுவித நடனம்

நலம்பெறத் தோன்றின

992

ஏழுவகையான இசைகளினின்று ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறிய பின்னர், அவற்றின் பெயரைப் பெருமான் அம்மையாருக்குக் கூறுகிறார்: