உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

121

கருணா மூர்த்தியாகிய இறைவன் ஆன்மாவுக்கு வீடுபேறு கொடுப்ப தற்காக அதைத் தூய்மைப்படுத்துகிற முறையில் திரோபவம் என்னும் மறைத்தல் செயலைச் செய்கிறார்.

ஆன்மாக்கள் மேன்மேலும் வினைகளைச் செய்யும்படி செய்வது திரோபவம் என்னும் மறைத்தல் செயலாம். “திரோதமாகிய மறைப்பாவது அந்தந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கர்மமலங்களைத் தொலைக்கத்தக்கதாக இருக்கிறது” என்று பௌஷ்கராகமம் கூறுகிறது. உயிர்கள் தூய்மை பெற்று மோட்சம் பெறப் பக்குவம் பெறும் பொருட்டுச் சிவபெருமான் இச்செயலைச் செய்கிறார்.

இந்த மூர்த்தத்திலே கைகளில் ஏந்தியிருக்கிற சூலங்கள் எதைக் குறிக்கின்றன? சூலம் மூன்று பிரிவாக இருக்கிறது. "மூன்று பிரிவுடைய சூலமானது மூன்று குணத்தைக் குறிக்கிறது" என்று காமிகாகமம் கூறுகிறது.2 “அரணி, செனனி, இரோதயித்திரி என்னும் மூன்று சக்தி வடிவினதாகிய மூன்று பிரிவையுடைய சூலப்படையானது சிவபெரு மான் மூன்று தொழில்களையுடைவர் என்பதையும் மும்மலங்களை நீக்குபவர் என்பதையும் குறிக்கிறது." என்று பௌஷ்கராகமம் கூறுகிறது. அதாவது, அழித்தல் (ஆரணி சக்தி). ஆக்கல் (செனனி சக்தி), காத்தல் (இரோதயித்திரி சக்தி) என்னும் மூன்று செயல்களைச் சிவபெருமான் செய்கிறார் என்னும் தத்துவக் கருத்தைத் திரிசூலம் தெரிவிக்கிறது.

66

மூவிலை யொருதாள் சூலம் ஏந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே

99

என்று இக்கருத்தைப் பட்டினத்து அடிகள் தமது ஒருபா ஒருபஃதில் கூறுகிறார்.

அதாவது, பிரமா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் செயலாகிய படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் இறைவன் செய்கிறார் என்பதைத் திரிசூலம் குறிப்பிடுகிறது என்பது கருத்து. இம்மூன்று செயல்களைச் செய்வதனால் உண்டாகும் பயன் என்னவென்றால், ஆன்மா கர்மங்களை அனுபவித்து அதனால் பாசங்கள் நீங்கித் தூய்மையடைந்து மோட்சம் பெறுவதற்குத் தகுதியாகிறது என்பதே.

அடிக்குறிப்பு

1. பௌஷ்கராகமம், பிந்து படலம், 44.