உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இறைவன் தமது இரண்டு திருவடிகளையும் முயலகன் மீது மாறிமாறி மதிக்கிற பாவனையாகக் காணப்படுகிறது. அவ்வாறு அழுத்தி அழுத்தி மிதிப்பது சற்று வேகமாகவும் அழுத்த மாகவும் நிகழ்வது போலத் தெரிகிறது.

கள்ளேசுவர மூர்த்தி

மைசூர் தேசத்தில் அருளகுப்பே என்னும் கிராமத்தில் பஞ்சலிங்கேசுவரர் என்னும் ஐந்து சிறிய கோவில்கள் இருக்கின்றன. இவ்வைந்தில் ஒரு கோவிலுக்குக் கள்ளேசுவரர் கோவில் என்பது பெயர். இக்கோவில் முன்மண்டபத்தின் மேல்விதானத்திலே தாண்டவ மூர்த்தியின் சிற்பம் ஒன்று இருக்கிறது. இது சோழர் காலத்துச் சிற்பம்போலத் தோன்றுகிறது.

இந்தத் தாண்டவமூர்த்தம் புதுமையானது (படம் 14 காண்க). தாண்டவமூர்த்தியின் சடைமுடி அவிழாமல் இருக்கிறது. கைகளில் துடியும், தீச்சுடரும் இல்லை. இவற்றிற்குப் பதிலாக வலது கையிலும், டது கையிலும் இரண்டு சூலங்களை ஏந்தியிருக்கிறார். வலது கையில் உள்ள சூலம் சிறியது; இடது கையில் உள்ள சூலம் சற்றுப் பெரியது.

மற்றொரு வலது கை அபய முத்திரையைக் காட்டுகிறது. இடது பக்கத்து இன்னொரு கை வீசியகரமாக வலது புறமாக நீண்டிருக்கிறது. கால்களின் கீழே முயலகன் கிடக்கிறான். தாண்டவமூர்த்தி தம்முடைய இரண்டு கால்களையும் முயலகன் மேல் மாறிமாறி வைத்து விரைவாகத் தாண்டவம் புரிகிறார். இவருடய வீசிய கரமும் கால்களின் அமைப்பும் இத் தாண்டவத்தின் வேகத்தை நன்கு தெரிவிக்கின்றன. இவருடைய பார்வை கீழ்நோக்கி முயலகனைப் பார்க்கின்றது.

இரண்டு பாதங்களும் முயலகன்மேல் ஊன்றுவதனால் இத்தாண்டவம் திரோபவமாகிய மறைத்தல் செயலைக் குறிக்கிறது. ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்துநின்று ஊட்டுவ தாகும்நின் ஊன்றிய பதமே

66

என்றார் குமரகுருபர சுவாமிகள்.

ஆன்மாவின் மலம் நீங்கித் தூய்மையடைய வேண்டுமானால், ஆ ன்மா இருவினைப் பயன்களை அனுபவித்து மலத்தை நீக்க வேண்டும். வினைகளைச் செய்து அவற்றின் பயனை அனுபவித்துக் கழித்தால்தான் ஆன்மா மலம் நீங்கித் தூய்மையடையும். ஆகவே,