உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

123

முடியாமல் தோல்வியுற்று இறுமாப்பு நீங்கினார் என்றும் புராணக்கதை கூறுகிறது. இது பாமரர்க்குரிய புராணக்கதை. இக் கதையில் சைவ சித்தாந்த சாத்திரத்தின் தத்துவம் ஒன்று அடங்கியிருக்கிறது. சாத்திரம் அறிந்தவர் இதன் கருத்தை ஆராய்ந்தறிவாராக.

ஊர்த்துவ தாண்டவம் நிகழ்ந்தபோது கார்க்கோடகன் என்னும் பாம்பரசனும், சுனந்தர் என்னும் முஞ்சிகேசி முனிவரும் இத் தாண்டவத்தைக் கண்டு வீடுபேறு பெற்றனர் என்னும் புராணக் கதையும் உண்டு.

இத்தாண்டவத்தில், சிவபெருமான் தமது ஒரு காலைத் தலைவரையில் உயரத் தூக்கிநின்று மிக வேகமாகச் சுழன்று ஆடுகிறார்.

56

“மண்டல நின்றங் குளாள மிட்டு

வாதித்து வீசி எடுத்தபாதம்

அண்ட முறநிமிர்ந் தாடும்எங்கள்

அப்ப னிடம்திரு வாலங்காடே

وو

என்பது காரைக்கால் அம்மையார் மூத்த திருப்பதிகம்.

"ஆலவனம் அனைத்தி னுக்கும் முதலான

நடனத் தானம் அருள்நட்டம்

மூலமதாம் அதனகத்துச் சண்ட தாண்டவம்

ககன முகடு நோக்கி

மேலதாக இடத்தாளை யெடுத்து வலத்தாள் ஊன்றி விளைக்கும் நட்டம்”

என்பது திருவாலங்காட்டுப் புராணம்.'

இந்தத் தாண்டவ உருவத்தில் சிவபெருமானின் காலின் கீழ் முயலகன் உருவம் இருப்பதும் உண்டு; சில சிற்பங்களில் முயலகன் இருப்பது இல்லை. வலக்கை இரண்டில் துடியும் அபய முத்திரையும் காணப்படும். இடது கைகள் இரண்டில், ஒரு கையில் தீச்சுடர் இருக்கும்; மற்றொரு கையைத் தலைக்கு மேல் உயரத் தூக்கி அகங்கையைத் கவிழ்த்துத் தூக்கிய திருவடிக்குமேல் அமைத்து இருக்கும்.

இடது காலை ஊன்றி நின்று வலது காலைத் தூக்கி ஆடுவது போல இவ்வுருவம் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு மாறாக இடது