உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

காலைத் தூக்கி வலது காலை ஊன்றி ஆடுவதாக இத்தாண்டவ உருவம் அமைப்பதும் உண்டு. இடது காலைத் தூக்கி ஆடியதாகத் திருவாலங் காட்டுப் புராணம் கூறுகிறது.2

எந்தக் காலை உயர்த்தினாலும், எந்தக் காலை ஊன்றினாலும் மூலக்கருத்துக்கு மாறுபாடு இல்லை. ஏனென்றால், தூக்கிய திருவடியில் அருளல் செயலும், ஊன்றிய திருவடியில் மறைத்தல் செயலும் நிகழ் கின்றன. என்பது சாத்திரக் கருத்து. ஆனால் சாத்திரம் இந்தக் காலைத் தான் தூக்க வேண்டும், இந்தக் காலைத்தான் ஊன்ற வேண்டும் என்று கூறவில்லை. ஆகவே, எந்தக் கால் உயர்த்தப் பட்டதோ அந்தக்காலில் அனுக்கிரகச் செயல் நிகழ்வதாகக் கொள்ளுதல் வேண்டும். ஆனந்தத் தாண்டவமாகிய நடராசத் திருவுருவத்திலும் திருவடியை மாற்றி யமைத்திருப்பது (கால்மாறி ஆடியது) ஈண்டு நினைவு கூறத்தக்கது.

இந்தத் தாண்டவம் ஐஞ்செயல்களில் ஒன்றான அருளல் என்னும் செயலைக் குறிக்கிறது என்பதை முதலிலேயே கூறியுள்ளோம். திருவாலங்காட்டுப் புராணமும் இதனையே கூறுகிறது. ஆதிசேடன், திருமாலை நோக்கி, ஊர்த்துவ தாண்டவத்தின் பயனைக் கூறவேண்டும் என்று கேட்க, அவர் கூறுகிறார்:

"நாற்றிசையும் போற்றிசெயும் ஆலவனப்

பெருமையினை நாதன் அல்லால்

போற்றிஎவர் புகழ்ந்துரைப்பார்! புனிதமதில் புனிதமாய்ப் பொருவற் றோங்கி

மேற்றிகழும் புண்ணியத்தின் புண்ணியமாய் வியனாகி, வீறு பாசம்

மாற்றி அருள் அளித்துஈசன் மலரடிக்கீழ்ப் பேரின்ப வாழ்வு சேர்க்கும்.”3

மேலும் இந்தத் தாண்டவக் கருத்தைக் கூறவேண்டும் என்று சுநந்த முனிவர் சிவபெருமானைக் கேட்டுக் கொள்ள, அப்பெருமான் கூறுகிறார்:

66

மண்டு இருட்குழு அகல அடியவர்கள்

மலமாயை முடிந்து நீங்கத்

தொண்டர் கணம் கதிமேவச் சோதிதமது

உருவெழுந்த சுடர்க்கண் மூசி