உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

அண்ட மெலாம்இருள் நீங்க ஆடல் செய்வோம்

ஆலவனத்து; உறுதி என்றும்.

994

125

இவ்வாறு புராணம் கூறுவதிலிருந்து, இந்தத் தாண்டவம் அருளல் செயலைக் குறிக்கிறது என்பதை அறிகிறோம். திருவாலங்காட்டுத் திருக்கோயிலில் நிகழும் இத்தாண்டவம் அனுக்கிரக தாண்டவம் என்று கூறப்படுவது ஈண்டு நினைவுகூறத்தக்கது.

ஐப்பசித் திங்கள் முழுநிலா நாளில் ஆகமத்தில் கூறிய முறைப்படி இறைவனைப் பூசித்து வணங்கி, இந்தத் தாண்டவத்தைக் காண்பவருக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களும் கிடைக்கும் என்று காரணாகமம் கூறுகிறது.

ஐந்தாவது செயலாகிய இது மூன்றாவது செயலாகிய சங்காரத் தொழிலோடு பொருத்திக் கூறப்படுகிறது.

"ஆலவனம் அனைத்தி னுக்கும் முதலான

நடனத் தானம் அருள்நட்டம்

மூலமதாம் அதனகத்துச் சண்ட தாண்டவம் ககன முகடு நோக்கி

மேலதாக இடத்தாளை எடுத்து வலத்தாள்

ஊன்றி விளைக்கும் நட்டம்

சாலுமிது சங்கார தாண்ட வமாம்

பிறப்பிறப்புத் தவிர்த லாலே

என்று திருவாலங்காட்டுப் புராணம் கூறுகிறது.5

சிவபெருமான் செய்தருளும் ஐந்தொழில்களில், மறைத்தல் செயலை ஆக்கல் செயலுடன், அருளல் செயலை அழித்தல் செயலுடனுன் சேர்த்து மூன்று செயலாகக் கூறுவதும் உண்டு. இதனைச் சிவஞான சுவாமிகள் தமது திராவிட மாபாடியத்திலே நன்கு விளக்குகிறார். அது வருமாறு:

66

கமங்களிலும் முதல்வனுக்கு இலயம், போகம், அதிகார மெனவும், ஆரணி, ஜனனி, இரோதயித்திரி எனவும் முத்தொழில் பற்றி மூன்றவத்தையும் மூன்று சக்தியுமே கூறப்பட்டன.ஆகலான், மறைப்பும் அருளும் உடன் கூட்டி ஐந்தொழில் என்பது யாண்டுப் பெற்றாமெனின், நன்று சொன்னாய்! மறைப்பாவது வினை நுகர்ச்சிக்கண் அதன்வழி நின்று நடாத்துவதாகிய முதல்வனது