உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

221

பச்சரிசியைவிட புழுங்கல் அரிசியில் சிறிதளவு தவிடு உண்டு. எப்படி என்றால் நெல்லை அவித்து உலரவைத்து அதைத் குற்றுகிற படியினாலே, அவிக்கப்பட்ட நெல்லில், தவிடு அரிசியுடன் ஒட்டிக் கொள்கிறது. அந்த நெல்லைக் குற்றி அரிசியாக்கும்போது, தவிடு அதிகமாகக் கழிந்து போகாமல், அரிசியோடு ஒட்டிக் கொண்டிருக் கிறது. ஆகையினாலே, பச்சரிசியைவிடப் புழுங்கல் அரிசி சிறிது சத்துடையது என்பதில் ஐயமில்லை. ஆகவே புழுங்கல் அரிசி நல்லது; அதிலும் கைக்குற்றல் அரிசி நல்லது.

தவிடு நீங்காத அரிசி அல்லது கோதுமையை உண்பதனாலேயே போதுமான பி. விட்டமின் நமக்குக் கிடைக்கிறது என்று கருத வேண்டா. தினந்தோறும் பி. விட்டமின் உள்ள வேறு உணவுப் பொருள் களையும் உணவாகக் கொள்ளவேண்டும். பி. விட்டமின் உள்ள வேறு உணவுப் பொருள்களை மேலே கூறியுள்ளோம்.

பி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்து, அனலினால் அழிந்துபோகிற தில்லை. ஆனால், சோடா உப்பு என்னும் உப்பைச் சேர்த்துச் சமைத்தால் இந்த உயிர்ச்சத்து அழிந்து போகிறது. ஆகையினாலே சோடா உப்பு சேர்க்காமல் சமைக்கவேண்டும். உணவு விடுதிகள் சிற்றுண்டிச் சாலைகள் முதலிய இடங்களில் இட்டலி, தோசை, வடை, போண்டா, பச்சி முதலிய உண்டிகளில் சோடா உப்புச் சேர்த்துச் சமைக்கிறார்கள். சோடா உப்பு சேர்ப்பதனாலே பண்டங்கள் விரைவாக வெந்து போகின்றன. அன்றியும் அந்தப்பண்டங்கள் உப்புசமாகப் பெரிதாகக் காணப்படு கின்றன. ஆனால் பி. விட்டமின் என்னும் முக்கியமான உயிர்ச்சத்து அழிந்துபோகிறது. அதனாலே உடம்புக்கு நலம் உண்டாவதில்லை. ஓட்டல்களில் உணவு அருந்துவது உடல் நலத்துக்குத் தீமை பயக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து உடல் நலத்துக்கு மிக முக்கியமானது என்பதையும் இந்த உயிர்ச்சத்துள்ள பொருள்களை நாள் தோறும் உணவாகக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

பி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்தில் சில உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றிய விபரம் நமக்குத் தேவையில்லை.