உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - 2

நடராசரைப் பற்றிய புராணக் கதை

சைவ, வைணவ மதங்களில் புராணம் என்றும், தத்துவ சாத்திரம் என்றும் இரண்டு கூறுகள் உண்டு. புராணக் கதைகள் சாதாரண அறிவுள்ள பாமர மக்களுக்காவும், தத்துவ சாத்திரங்கள் நுண்ணறிவுள்ள பண்டிதர்களுக்காகவும் (அறிஞர்களுக்காகவும்) எழுதப்பட்டவை. தத்துவம், மதத்தின் உயிர்போலவும், புராணம் மதத்தின் உடம்பு போலவும் இருக்கின்றன. புராணக் கதைகள் மதத் தத்துவத்தின் உண்மையை விளக்கும் உதாரணங்களாக உள்ளன. சில சமயங்களில் கதைக்கும் தத்துவ சாத்திரத்துக்கும் தொடர்பு இல்லாமலே இருக்கின்றது.

நடராசரைப் பற்றிய ஒரு புராணக் கதையும் உண்டு அக்கதையும் சாத்திரக் கருத்துக்கும் சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. அக்கதையின் சுருக்கம் இது;

தாருகவனத்து முனிவர்கள் தங்கள் பத்தினிகளுடன் இருந்து தவம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கடவுட் கொள்கை இல்லாதவர்கள். தாங்கள் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி பலன் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடையவர்களாகிக் கடவுளை வழிபடாமல் இருந்தார்கள். அவர்களுக்குக் கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகச் சிவபெருமான் பிக்ஷாடனர் உருவங்கொண்டு தாருகவனத்துக்குச் சென்றார். அவரைக் கண்ட முனிவரின் மனைவிமார் அவருடைய அழகில் ஈடுபட்டு அவரைப் பின்பற்றிச் சென்று கற்பிழந்தனர்.

தங்கள் மனைவியர் கற்பிழந்ததை அறிந்த முனிவர்கள் சிவபெருமானைக் கொல்வதற்காக முயற்சி செய்தார்கள். தீமையையும் அழிவையும் உண்டாக்குகிற அபிசார யாகத்தைச் செய்தார்கள். யாகத்தீயிலிருந்து ஒரு பெரும் புலி வெளிவந்தது. அப்புலியை அவர்கள் சிவபெருமான் மேலே ஏவினார்கள். அவர் அக்கொடிய