உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

1879

1880

1882

1884

23

மீண்டும், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் ஆசிரிய ரானார்.

எம். ஏ. பரீட்சையில் தேறினார்.

திருவனந்தபுரம் அரண்மனையில் பிறவகை சிரஸ்தார் (Commis sioner of Seperate Revenue) என்னும் உத்தியோகத்தில் அமர்ந்தார்

திருவனந்தபுரத்தில் சைவப் பிரசார சைவப் பிரசார சபையைச் சில நண்பர்களுடன் சேர்ந்து நிறுவினார்.

1885 திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும் முதல்வராகவும் அமர்ந்தார்.

1888 சயன்ஸ் பயில்வதற்கு முன்னுரையாக "நூற்றொகை விளக்கம்' என்னும் நூலை இயற்றி வெளியிட்டார்.

1889

1891

1894

1895

1896

சிவகாமி சரிதை என்னும் கவிதைநூலை இயற்றினார். இது ஆங்கிலக் கவிதையைத் தழுவி இயற்றப்பட்டது.

புகழ்பெற்ற மனோன்மணீயம் என்னும் நாடக நூலை முதன் முதலாக வெளியிட்டார்.

“Early Sovereigns of Travancore" (திருவாங்கூரின் பழைய அரசர்கள்) என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

“The Age of Gnanasambandar" (ஞானசம்பந்தரின் காலம்) என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார். (Madras Christian College Magazine.)

“ராய்பகதூர்” என்னும் சிறப்புப் பட்டம் பெற்றார்.

1897 ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு உயிர் நீத்தார்.

மனோன்மணீயக் கதைக்கு முதனூலாக அமைந்த The Lost Tale of Miletus என்னும் செய்யுள் நூலை இயற்றிய லிட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்றையும் இங்குக் சுருக்கமாக அறிதல், இந் நூலாராய்ச்சிக்குப் பயனுள்ளதாகும். ஆகவே அவருடைய வரலாற்றையும் சுருக்க மாகத் தருகிறோம்.