உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

43

தமன் கண்ட கனாவைப் பரமபசுபதியான ஈசுவரனது அருளின் ஸ்புரணமாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர் கட்டிய சுருங்கையைப் பிரத்தியக்ஷாநு பூதிக் கேதுவான பாசவிமோசன பந்தாவாகவும், பிறவும் இம்முறையே பாவித்து உய்த்துணர்ந்துகொள்ள வேண்டியது.

ஏறக்குறைய வாசக நடைக்குச் சமமான அகவற்பாவால் இந் நாடகம் பெரும்பாலும் ஆக்கப்பட்டிருக்கிறதினால் ஒருவர் மொழியாக வரும் ஒரு வரியில் அகவல் அடிமுடியா விடங்களில் அடுத்த வரியில் வரும் சீரோடு சேர்த்து ஆசிரிய அளவடியாக்கி முடித்துக்கொள்க.

பலவேறு தொழில்களிடையிலும் பிணி கவலையாதிகள் நடுவிலும் ஆங்காங்கு அகப்பட்ட அவகாசங்களிற் செய்யப் பட்டமையால் இந் நாடகத்துட் பல பாகங்கள் என் சிற்றறிவிற்கே திருப்தி தருவன அல்ல. பல காரணங்களால் ஆங்காங்குப் பல வழுக்களும் வந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றைத் திருத்தி அனுபந்தத்துள் சேர்த்திருக்கின்றேன். இவை போன்றன பிறவும் உளவேல் கண்டுணர்த் தும் அன்புடையார்க்கு எப்போதும் நன்றியறிதல் உடையனாய் இருப்பேன். கல்வி கேள்விகளிற் சிறந்த கனவான்கள் இக் கூறிய குறைவுகளைப் பாராட்டாது என்னை இம் முயற்சிக்குத் தூண்டிவிட்ட நன்னோக்கத்தையே கருதி இந் நவீன நாடகத்தை அநாதரவு செய்யாது கடைக்கணித்து அருள்புரியப் பலமுறை பிரார்த்திக்கின்றேன்.

66

பொறிஇன்மை யார்க்கும் பழியன்(று) அறிவறிந் தாள்வினை யின்மை பழி.

குரு சுந்தர சரணாலயம்.