உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

'துறவிகள் கோவிலைக் கண்டு மகிழ்வர். அவர் கோவில் கட்டும்படி கூறினார் ; நாம் கோட்டை கட்டினோம். அதுபற்றி அவர் பொறாமையும் வெறுப்புங் கொண்டுள்ளார்போலும்' என்று கூறினான். அரசன் அதனை ஆமோதித்தான். குடிலன் மேலும் முனிவர்மேல் வெறுப்பு உண்டாக்க இவ்வாறு பேசினான் : 'வேடத்தைக் கண்டு யாரையும் முற்றுந் துறந்தவர் என்று கருதக்கூடாது. வசிட்டர் கௌசிகர் முதலிய இருடிகள் அக்காலத்து மன்னர்களுக்கு இன்னல்கள் விளைக்கவில்லையா? உலகத்திலே ஆசை அற்றவர் யாருளர் ?' என்று பேசினான்.

குடிலனுடைய கபடங்களை நன்கறிந்த நாராயணன், குடிலனுடைய பேச்சை நம்பக்கூடாது என்று அரசனுக்குக் குறிப்பாகக் கூறுகிறான். பசை அற்ற எலும்பை ஒரு நாய் கௌவி எடுக்கும்போது அரசன் அவ் விடம் போக, அந்த நாய் தான் கௌவும் எலும்பை அரசன் கவர்ந்து கொள்ள வந்தான் என்று கருதி உறுமுகிறது என்னும் கருத்தமைந்த ஒரு வெண்பாவைக் கூறுகிறான். (குடிலனாகிய நாய் அதிகாரப் பதவியைக் கௌவிக்கொள்ள முயற்சி செய்யும்போது, அப் பதவியைச் சிறிதும் கருதாத சுந்தரமுனிவர் அரசனிடம் சில செய்தியைக் கூறியது கேட்டு, அவர் தன்னுடைய அதிகாரப் பதவிகளைக் கவர்ந்துகொள்ள விரும்புவதாக நினைப்பது ஏன் என்பது இவ்வெண்பாவின் கருத்து.)

அவ்வமயம், வாணியின் தந்தையாகிய பொருளாசை கொண்ட சகடர் அவ்விடம் வந்து வாணியின் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறார். வாணி, நடராஜன் என்பவனை மணஞ் செய்து கொள்ளப் பிடிவாதமாக இருக்கிறாள் என்றும், தனக்கு அது விருப்பமில்லை என்றும், அமைச்சன் மகனாகிய பலதேவனுக்கு அவளை மணம் செய்விக்க விரும்புவதாகவும் கூறுகிறார். அரசர்பெருமான் அவளுக்குப் புத்திமதி கூறிப் பலதேவனை மணக்கும்படி செய்யவேண்டும். இல்லையேல் இந்தத் தள்ளாத வயதில் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தேசாந்தரமாகக் காசிக்குப் போய்விடுவேன் என்று சகடர் கூறி வருந்துகிறார். இவற்றையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், இந்தக் கிழவன் பொருளாசை கொண்டு தன் மகளைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க விரும்புகிறான் என்பதை மறைமுகமாக அரசனிடம் ஒரு வெண்பாவினால் கூறுகிறான். தான் கொடுத்த வாக்குறுதியைக் காக்கும்பொருட்டு அன்று அரிச்சந்திரன் காசிக்குச் சென்று தன் மகனை விற்றான். இன்று, பொருளாசையினால் தன் மகளை விற்கும் அரிச்சந்திரரும்