உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20 அதற்குள் பலதேவனை மணஞ்செய்ய முடிவு செய்துகொள்' என்று கூறுகிறான்.

6

அவ்வமயம் சுந்தரமுனிவர் அங்கு எழுந்தருளுகிறார். மனோன் மணியின் வேறுபாட்டைக் கண்டு அதுபற்றி வினவுகிறார். செவிலித்தாய், மனோன்மணியின் நிலையை விளக்கிக் கூறுகிறாள். உண்ணாமலும், உடுக்காமலும், நீராடாமலும், விளையாடாமலும் ஏக்கங்கொண்டிருப்பதை விளக்கிக் கூறுகிறாள். சுந்தரமுனிவர் மனோன்மணியின் வேறுபாட்டுக் குரிய உண்மைக் காரணத்தை அறிகிறார். அது மணப்பருவத்தில் உண்டாகிற வேறுபாடு என்பதைத் தெரிந்து, அரசகுமாரன் ஒருவனுக்கு அவளை மணஞ் செய்விக்கும்படிஅரசனிடம் கூறுகிறார். அரசன் இவளுக்குத் தகுந்த குமரன் யார் உளன் என்று முனிவரை வினவுகிறான். சேர நாட்டு அரசன் புருஷோத்தமன் மனோன்மணிக்குத் தகுந்த மணவாளன் என்று முனிவர் கூறுகிறார். நல்லது, யோசித்து அதன்படி செய்கிறேன் என்கிறான் அரசன். யோசிக்கவேண்டாம் ; நம்மிடமுள்ள நடராஜனைத் தூது அனுப்பினால் அவன் இதனை நன்கு முடிப்பான் என்று முனிவர் கூற, அரசன் குடிலனோடு கலந்து யோசித்துச் செய்வதாகக் கூறுகிறான். குடிலனுடைய எண்ணத்தை நன்கறிந்தவரான முனிவர் தெய்வத்தைப் பிரார்த்தித்த வண்ணம் போகிறார். அரசன் மணச் செய்தியைக் குடிலனுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்கிறான்.

ஐந்தாம் களம்

அமைச்சனாகிய குடிலன் தனது மாளிகையில் தனியாக ஆழ்ந்த யோசனையோடு உலவிக்கொண்டிருக்கிறான். 'பழைய தலை நகர மாகிய மதுரையை விட்டுத் திருநெல்வேலிக்கு வருமாறு செய்தேன். அரசன் என் சொல்லுக்கு அடங்கி நடக்கிறான். என்னிடம், எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறான். அரசகுமாரி மனோன் மணிக்குத் திருமணம் செய்யும் காலம் நெருங்கிவிட்டது. இது ஒரு நல்ல வாய்ப்பு. என் மகன் பலதேவன் தீயகுணம் உள்ளவனானாலும் அவனுக்கே மனோன் மணியை மணம் செய்தால் நான் நெடுநாளாக எண்ணியிருக்கும் கருத்து நிறைவேறிவிடும். இதைச் செய்து முடிக்கும் உபாயம் என்ன என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.

அவ்வமயம், சேவகன் ஒருவன் அரசன் அனுப்பிய கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்க, அதனை வாசித்துப் பார்த்துச் செய்தியறிகிறான். புருடோத்தமனுக்கும் மனோன்மணிக்கும் திருமணம் நடக்காதபடி

"