உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன்:

நான்காம் களம்

இடம் : கன்னிமாடம்.

காலம் : மாலை.

(மனோன்மணி சயனித்திருக்க; ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.)

LO

5

(நேரிசை ஆசிரியப்பா)

உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாததென்? விரும்பிய தென்னன் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்; வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே. தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்! ஏதா யினுமெனக் கோதா துளதோ? பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன் 15 திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி

10

நாடி நாடிப் பாடியும் வராது.

அம்புலி – நிலா. மாய்ப்பன்

அழிப்பன். உறுத்தும் கூற்றுவன்

வருத்தும் யமன். ஒறுத்து - தண்டித்து. வனம் – வர்ணம். (இடைக்

குறை.)