உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

கேட்டதை எல்லாம் தருகிற கற்பக மரம் என்னும் தெய்விக மரத்தை அதன் அருமை பெருமை தெரிந்து அதனைத் தகுந்தபடி பயன்படுத்தத் தெரியாமல், ஒருவன் அதனை வெட்டிச் சுட்டுக் கரியாக்கி உலைக்களத்துக்குப் பயன்படுத்துவது போல, மனிதரின் மடமை இருந்தவாறு என்னே! தனக்கென வாழும் மிருக மனப் பான்மையை நீக்கிப் பிறர்க்கென வாழும் பேரறிவாளனை நான் எனது என்னும் செருக்கை அகற்றி மனத்தை அமைதிப்படுத்திப் பேரின்ப வெள்ளத்தில் முழுகச் செய்ய மனத்தைப் பக்குவப்படுத்தும் பாட சாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை. இதனை இவ்வாறு கருதும் நல்லறிவு இல்லாதவர், தினவு கொண்ட மிருகங்கள் தமது தினவைத் தீர்த்துக்கொள்ள உராயும் மரக்கட்டைபோல மடத்தனத்தினால் தம்மையும் மற்றவரையும் கெடுக்கும் கெடுமதியை என்னென்பது! நாரணா! இன்று நான் கண்டதும் கேட்டதும் எனக்குத் தீராத் துயரத்தைத் தருகின்றன. நான் போய் வருகிறேன். ஏதேனும் நிகழ்ந்தால் - முனிவர் ஆசிரமத்தில் இருப்பேன் அங்கு வந்து சொல்லு” என்று கூறி நடராஜன் போகிறான்.

“இது என்ன புதுமை ! போகிற இடத்திலெல்லாம் நான் காண்ப தும் கேட்பதும் கதை கதையாக இருக்கிறது. சரி ; நடப்பது நடக்கட்டும். நேரமாயிற்று" என்று சொல்லிக் கொண்டே நாராயணன் போகிறான்.

மூன்றாம் களம்

காலை நேரம், திருவனந்தபுரத்து அரண்மனையில் சேர நாட்டரசன் புருடோத்தமன் தன்னந் தனியே இருந்து தனக்குள் எண்ணுகிறான்: “நாள்தோறும் நான் கனவிற் காணும் மங்கை யாரோ தெரியவில்லை. தேவலோகத்துத் தெய்வ மகளிரைக் கண்டாலும் கலங்காத என் மனம் இவளைக் கண்டு, மத்தினால் கடையப்படுகிற தயிர்போல, அலைகின்றது. நீண்ட கூந்தலும் அணிந்த ஆடையும் நெகிழ்ந்து விழ, முழுநிலா போன்ற முகத்தைக் கவிழ்த்துக் காதல் கனியும் கண்களால் நோக்கித் தனது அழகான கால் விரலினால் தரையைக் கீறி நின்ற காட்சி என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அவள் யாரோ, எந்நாட்டவளோ, ஒன்றும் தெரியவில்லை. அன்பும், ஆழகும், நலமும் உடைய அவளை நேரிற் காண்பேனானால்..... காண முடியுமா? அது வீண் எண்ணம். இந்தக் கனவை வெளியில் யாரிடத்திலும் சொல்ல இயலவில்லை. கனவில் காண்பன பொய் என்று